Published : Jan 25, 2025, 05:10 AM ISTUpdated : Jan 25, 2025, 05:18 AM IST
Top 5 Lucky Zodiac Signs Today January 25 2025 Horoscope : ஜனவரி 25ஆம் தேதி சனிக்கிழமை ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டமான நாளாக இருக்க போகிறது. அதைப் பற்றி காணலாம்.
Top 5 Lucky Zodiac Signs Today January 25 2025 Horoscope : கிரக நிலைகளின் மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் அமைகிறது. வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். அந்த வகையில் ஜனவரி 25ஆம் தேதி சனிக்கிழமையான இன்று இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய போகிறது. அடுத்தடுத்த நாட்களில் வேலையில் முன்னேற்றம், தன்னம்பிக்கை அதிகரிப்புடன் செல்வம் பெருகும் வாய்ப்புகள் உள்ளன. ஜனவரி 25 அன்று எந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும் என்பதை அறிந்து கொள்வோம்.
26
Horoscope, Daily Rasi Palan, Indraya Rasi Palan
மிதுனம் ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்:
மிதுன ராசிக்காரர்கள் மீது நல்ல தாக்கம் ஏற்படும். ஜனவரி 25 நல்ல நாளாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் காதலனை சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல் விலகும். மதச் செயல்களில் ஈடுபடலாம். மதச் செயல்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. முதலில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சமூக ரீதியாக வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்லலாம். வேலை செய்பவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்புவதை விரைவில் பெறுவீர்கள். பணம் மற்றும் பதவி உயர்வு இரண்டும் உங்கள் அதிர்ஷ்டத்தில் உள்ளன. விரைவில் நல்ல செய்தி தேடி வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
ஜனவரி 25 கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் எதையாவது கவலைப்பட்டால், அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். செல்வம் பெருகும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடையலாம். வேலை செய்பவர்களுக்கும் நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையின் ஆதரவால் வேலை நிறைவேறும். படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
56
January 25 Rasi Palan Today, Astrology, Horoscope Today
மகரம் ராசிக்கான ஜனவரி 25 ராசி பலன்:
மகர ராசிக்காரர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும். நிதி நிலை மேம்படலாம். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடக்கும். செல்வம் பெருகும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் லாபம் மட்டுமே அடைவார்கள். தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
ஜனவரி 25 மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலையைச் செய்ய முடிவு செய்தாலும். அதில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.