50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் புஷ்ய யோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நீங்க தான் கோடீஸ்வரன்!

Published : Jan 24, 2025, 09:12 AM IST

Mars Transit in Pushya Nakshatra 2025 Palan After 50 Years : செவ்வாயின் புஷ்ய யோகம் 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரப்போகிறது. அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம். 

PREV
16
50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் புஷ்ய யோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நீங்க தான் கோடீஸ்வரன்!
Kuja Pushya Yogam, Zodiac Signs Impacted by Kuja Pushya Yoga

Mars Transit in Pushya Nakshatra 2025 Palan After 50 Years : செவ்வாய் புஷ்ய யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு சுப யோகம். 50 வருடங்களுக்கு ஒருமுறை வரும். அந்த வகையில் இந்த இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரவுள்ளது. செவ்வாய் புஷ்ய யோகம் காரணமாக 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்ட உள்ளது. அந்த ராசிகளில் உங்கள் ராசி உள்ளதா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

26
Kuja Pushya Yoga 2025 Palan Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் நடைபெறுகிறது. குறிப்பாக மனிதர்கள் பிறக்கும்போது அந்த நேரத்தில் இருக்கும் கிரக நிலைகளை வைத்து பிறந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் முன்கூட்டியே சொல்ல முடியும். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணங்கள் ஆகியவற்றைப் பார்த்து பலர் முக்கியமான பணிகளைத் தொடங்கி நல்ல பலன்களைப் பெறுகிறார்கள். அப்படி ஜோதிடத்தை நம்பும் அனைவருக்கும் இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

36
Today Horoscope, Zodiac Signs Impacted by Kuja Pushya Yoga

செவ்வாய் சனீஸ்வரரின் நட்சத்திர பெயர்ச்சி 2025:

50 வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் சனீஸ்வரரின் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த சுப நிகழ்வு ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும். அன்று காலை 6:32 மணிக்கு செவ்வாய் கிரகம் சனி கிரகத்தின் நட்சத்திரமான புஷ்ய நட்சத்திரத்தில் நுழையும். இது மங்கள-புஷ்ய யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் காரணமாக 3 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த யோக காலம் தொடங்கியதிலிருந்து அந்த ராசிகள் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றியடையும். அந்த ராசிகள் என்னவென்றால்..

46
Mangal Pushya Yoga 2025 Palan

கடக ராசி:

இந்த ராசியில் வியாபாரிகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு பெரிய வியாபார ஒப்பந்தங்கள் வரலாம். சனியில் செவ்வாய் நுழைவதால் நன்மைகள் அதிகம். குறிப்பாக சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும் வாய்ப்புள்ளது.

56
Mars Transit in Pushya Nakshatra Palan Tamil

கன்னி ராசி:

இந்த ராசிக்காரர்களுக்கு சுப யோகம் காரணமாக பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சம்பளமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கடன் தொல்லைகள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய தொழில் தொடங்கினால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

2025ல் கோடீஸ்வர யோகம் அருளும் செவ்வாய் – யாருக்கெல்லாம் ஜாக்பாட் தெரியுமா?
 

66
Mars Transit in Pushya Nakshatra 2025 Palan After 50 Years

மீன ராசி:

செவ்வாய் புஷ்ய யோகம் காரணமாக வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய கார் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

செவ்வாய் பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு கஷ்ட காலம் ஸ்டார்டிங்!
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories