ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆளுமைகள் குணாதியசங்கள் இருக்கும். ஒருவரின் ராசி, நட்சத்திரத்தை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பது கணிக்க முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Aries daily horoscope
மேஷம்
அச்சமற்றவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகம் மேஷ ராசியினர் அறியப்படுகின்றனர். மேஷ ராசியை கொண்ட பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் மன உறுதியும், விடா முயற்சியும் பிடிவாத குணம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படலாம். வாழ்க்கையின் பல அம்சங்களில் வெற்றி பெற்றவர்களாவும், வலிமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மேஷ ராசி பெண்கள் விரும்புவார்கள்.
Dainik Vrishbha Rashifal
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் எளிமையானவர்களாவும், விசுவாசம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் இந்த குணங்கள் சிறந்த மனைவியாகவும் தோழியாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கென ஒரு வழக்கமான பழக்கத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். தங்கள் வழக்கமான நடைமுறைகளுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது தடை ஏற்பட்டாலோ மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். மேலும் தங்கள் பொறுப்புகளை மிகச்சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
Leo daily rashifal
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்களிடம் இயற்கையாகவே தலைமைப் பண்பு அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கும் இந்த ராசி பெண்கள், தங்கள் இலக்குகளை அடைய எந்த ரிஸ்கையும் எடுக்க தயங்கவோ அல்லது பயப்படமாட்டர்கள். இருப்பினும் இந்த குணங்களால் இவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பதாக தோன்றலாம். தங்கள் அன்புக்குரியவர்களை அதிகமாக பாதுகாப்பார்கள். தங்களுக்கு பிடித்தவர்ளின் விஷயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை கொண்ட பெண்கள் மிகவும் தீவிரமானவர்களாவும், ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் விசுவாசம் கொண்டவர்களாக இருக்கும் இந்த ராசிப் பெண்கள் தங்களின் வலுவான கருத்துகள் மற்றும் உணர்ச்சிகளை பாதுகாக்க விரும்புவார்கள் இதனால் இவர்கள் பிடிவாதமானவர்களாக கருதப்படலாம். தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் உறுதியாக இருப்பதால் இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள் என்று புரிந்துகொள்ளப்படுவார்கள்.