மிகவும் ஆபத்தான 3 ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. இவங்ககிட்ட எந்த பிரச்சனையும் வச்சுக்காதீங்க..

First Published | Jan 23, 2024, 6:52 PM IST

மிகவும் ஆபத்தான ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். சிலர் பொறுமையானவர்களாகவும், எதையும் எளிதில் மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இன்னும் சிலரோ தங்கள் வழியில் யாராவது வந்தால் உடனடியாக அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள்.

யாராவது தங்கள் தீங்கு செய்தாலோ அல்லது தங்கள் எதிரிகளுக்கும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் உங்கள் ராசியின் அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடியும். ஆம்.. ஜோதிடம் ஒரு நபரின் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் கணிக்கவில்லை. ஒரு நபரின் ஆளுமைகள் மற்றும் குணாதிசயங்களையும் கணிக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி மிகவும் ஆபத்தான ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Aries daily horoscope

மேஷம் :

தைரியமானவர்களாகவும்உறுதியானவர்களாவும் கருதப்படும் மேஷ ராசியினர், மிகுந்த போட்டித்தன்மை மிக்கவர்கள். சில நேரங்களில் தங்களை ஒரு போர் வீரன் என்று நினைத்துக்கொள்வார்கள். எனவே மேஷ ராசிக்காரர்களுடன் சவால்களை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயம். இவர்களின் மன உறுதி, இவர்களை அச்சம் இல்லாத நபர்களாக மாற்றும். எனவே தங்களை எதிர்ப்பவர்களிடம் வலிமையான எதிரிகளாக மாறுவார்களாம்..

For Scorpios 02

விருச்சிகம் :

விருச்சிக்க ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் தீவிரமானவர்களாகவும், மர்மமானவர்களாகவும் இருப்பார்கள். வெளியில் பார்ப்பதற்கு அமைதியானவர்களாக இருந்தாலும், தங்கள் மனதிற்குள் சிக்கலான திட்டங்களை போட்டும் நபராக இருப்பார்கள். மிகவும் விசுவாசமிக்க விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தால் பழிவாங்கும் நபராக மாறலாம். விருச்சிக ராசிக்காரர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவே கூடாது. ஏனெனில் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். அவர்களை சீண்டினால் மிகவும் ஆபத்தான நபராக மாறிவிடுவார்களாம். அவர்களின் எதிர்கள் அதற்கான பிரதிபலனை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ள வேண்டி இருக்குமாம்.

மகரம் :

எதையும் சரியாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்றும் லட்சிய உணர்வு மிக்கவர்களாவும் மகர ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையை ஒரு சதுரங்க விளையாட்டை போல் உணர்வார்கள். எனவே வாழ்க்கையிலும் எப்படி முன்னேறுவது எப்படி என்று தொடர்ந்து காய் நகர்த்தி வருவார்களாம். ஆனால் அவர்களின் பாதையில் குறுக்கிட்டால், மிகவும் துல்லியமான பதிலடியை கொடுப்பார்களாம். தங்கள் எதிரியை தாக்க சரியான நேரத்தை பார்த்து காத்துக்கொண்டிருப்பார்களாம். எனவே மகர ராசிக்காரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Latest Videos

click me!