ரிஷபம்
உறுதியான மனம் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், தங்கள் துணையிடம் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்கள். பரந்த இதயத்துடன், தனது அன்பை துணைக்கு வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். தங்கள் அன்பை சொல்லில் காட்டுவதை விட செயலில் காட்டுவதையே இவர்கள் விரும்புவார்கள். தனது மனைவியின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அசைக்க முடியாத ஆதரவையும் பாதுகாப்பான புகலிடத்தையும் வழங்குவார்கள்.