Astrology: எதைப் பற்றியும் கவலைப்படாமல், எப்போதும் ஜாலியாக வாழும் 4 ராசிகள் யார் தெரியுமா? உங்க ராசி இருக்கா?

Published : Oct 30, 2025, 02:13 PM IST

Zodiac signs that live without worries: ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக வாழ்வார்களாம். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
கவலைப்படாமல் வாழும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான ஆளுமைத் திறன்கள், பண்புகள், குணாதிசயங்கள் உண்டு. சிலர் எப்போதும் எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆனால் சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே மன நிம்மதியுடனும், அமைதியுடனும் காணப்படுகின்றனர். இவர்களை ஆளும் கிரகங்கள், இவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள், இவர்கள் வாழ்க்கையை அணுகும் விதம் இத்தகைய அமைதியான வாழ்வுக்கு காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தின்படி எப்போதும் கவலைப்படாமல் அமைதியாக வாழும் சில ராசிக்காரர்கள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

26
தனுசு

12 ராசிகளிலும் தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், மகிழ்ச்சியான ஆத்மாக்களாகவும் கருதப்படுகின்றனர். இவர்களை ஆளும் கிரகம் குரு பகவான். குரு பகவான் அதிர்ஷ்டம், ஞானம், கல்வி, அறிவு ஆகியவற்றின் காரகராவார். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் அளவில்லா நம்பிக்கையுடனும், எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறை எண்ணத்துடனும் காணப்படுவார்கள். இவர்கள் அற்பமான விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. வாழ்க்கையின் பரந்த நோக்கம் என்ன என்பதில் மட்டுமே இவர்களது கவனம் இருக்கும். 

ஒரு பிரச்சனை வந்தால் அதில் மூழ்கி விடாமல், அதிலிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? அடுத்து என்ன செய்யலாம்? என்று உடனடியாக முன்னேறிச் செல்லும் இயல்பு இவர்களிடம் இருக்கும். மேலும் இவர்களது சாகச மனப்பான்மை புதிய இடங்களை தேடிச் செல்லவும், அறிவை விரிவுபடுத்தும் ஆர்வமும் கொண்டவை. இதன் காரணமாக இவர்கள் எந்நேரமும் உற்சாகமாக இருப்பார்கள். எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

36
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதை விட அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள். இதுவே இவர்களின் அமைதிக்கு மிகப்பெரிய காரணமாகும். இவர்கள் தனித்துவமான சிந்தனையை கொண்டவர்கள். சமூக மரபுகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். இவர்களை ஆளும் கிரகம் யுரேனஸ். இது புதுமை மற்றும் சுதந்திரத்தின் கிரகமாகும். கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதில்லை. 

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு நடைமுறை சிந்தனையுடன் வாழ்க்கையை அணுகுவதால் தேவையற்ற நாடகங்கள் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை அறிவார்ந்த முறையில் செயலாக்கி, அமைதியைப் பெறுகின்றனர். இதனால் இவர்கள் எந்த ஒரு சூழலையும் நிதானத்துடனும், தெளிவுடனும் கையாளுகின்றனர்.

46
மீனம்

மீன ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்டவர்கள். இவர்களை ஆளும் கிரகம் நெப்டியூன். இது கனவுகள் உள்ளுணர்வு மற்றும் ஆன்மீகத்தின் கிரகமாகும். மீனம் ஒரு நீர் ராசியாக இருந்தாலும் இவர்கள் அமைதியான கனிவான மற்றும் அனுதாபம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் அணுகுகிறார்கள். 

இவர்களின் ஆழமான கற்பனை உலகம் மற்றும் ஆன்மீக நாட்டம் இவர்களை நிஜ உலகின் கவலைகளில் இருந்து விலகி இருக்க உதவுகிறது. பிரச்சனைகள் வரும் பொழுது இவர்கள் கோபப்படுவதில்லை. மாறாக அமைதியாகவும், கருணையுடனும் நிலைமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். விமர்சனத்தைக் கூட தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மாறுபட்ட பார்வையாக கருதுகின்றனர்.

56
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் நிலைத்தன்மை மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை வாழ்பவர்கள். இவர்களை ஆளும் கிரகம் சுக்கிரன். இவர் அழகு, அன்பு மற்றும் இன்பத்தின் கிரகமாகும். இவர்களது இயல்பே மிகவும் நிதானமானது. தம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்கள் அல்லது மற்றவர்களின் கருத்துக்களுக்கு இவர்கள் ஆட்படுவதில்லை. 

தங்களின் யோசனைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களின் வாழ்க்கையை ஒழுங்கான முறையில் அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிறு இன்பங்களை அனுபவிப்பதில் கவனம் செலுத்துவதால், இவர்கள் பெரிய கவலைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.

66
கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஜோதிடத்தின்படி இந்த ராசிகள் இயற்கையாகவே கவலைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கின்றனர். இருப்பினும், மன அமைதி என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு தேடல் ஆகும். எந்த ராசியாக இருந்தாலும் நேர்மறை சிந்தனைகள், தியானம் மற்றும் மகிழ்ச்சியான விஷயங்களில் கவனம் செலுத்தினால் நாமும் இந்த ராசிக்காரர்களைப் போல கவலையற்ற வாழ்வை வாழ முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories