வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் பாவ கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ராகு கேது தங்களின் ராசிகளை மாற்றும்பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2026 டிசம்பர் 5ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து சனிக்கு சொந்தமான மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து சந்திரனுக்கு சொந்தமான கடக ராசிக்கும் மாற இருக்கின்றனர். இந்தப் பெயர்ச்சி சுமார் ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) வரை நீடிக்கும்.
ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் நிழல் கிரகங்களாகும். இவர்கள் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குகின்றனர். பொதுவாக ராகு 3,6,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுதும், கேது 3,6,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுதும் சுப பலன்களை அதிகம் வழங்குவார்கள் என்பது ஜோதிட விதியாகும். ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிக்கும் பொழுது அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.