Astrology: இந்த 4 ராசிக்காரங்க சகுனி மாதிரி, சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகளாம்.. உங்க ராசி இருக்கா?

Published : Sep 19, 2025, 11:21 AM IST

Zodiac signs most skilled at manipulation: ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் சூழ்ச்சி செய்வதில் திறமையானவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகளாக விளங்கும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான ஆளுமைத் திறன்கள் மற்றும் பண்புகள் உள்ளன. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பல வகையான குணங்கள் உள்ளன. சிலர் மிகவும் நல்லவர்களாக இருந்தால், சிலர் தீய எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலருக்கு இயற்கையாகவே சூழ்ச்சிகள் செய்து வெற்றி காணும் திறமை இருக்கிறது. அவர்களுடைய இத்தகைய குணத்திற்கு அவர்களை ஆளும் கிரகங்கள் மற்றும் ராசிகள் காரணமாக அமைகிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் சூழ்ச்சி செய்வதில் திறமைக்காரர்களாக விளங்குவார்கள் என்று பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுனம் என்பது இரட்டையர்களின் ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் இரட்டை தன்மையைக் கொண்டவர்கள். இவர்களை நம்பி நாம் ஏதேனும் ரகசியங்களை பகிர்ந்து கொண்டால், அதை நமக்கு எதிராகவே பயன்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். நாம் ஒரு காரியத்தை செய்தால் ஒரு நபர் காயப்படுவார் என்று இவர்கள் எண்ணுவதில்லை. அவர்களுடைய செயல்கள் எப்போதும் சொந்த நலனை முன்னிறுத்தியே இருக்கும். மகாபாரதத்தில் வரும் சகுனி கூட மிதுன ராசியை சேர்ந்தவர் தான். எனவே இவர்களிடம் எப்பொழுதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கு முன்னரும், அவர்களிடம் பேசுவதற்கு முன்னரும் கவனமாக இருக்க வேண்டும்.

35
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஒருவரிடத்தில் குறை காண்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ஏதாவது ஒரு வார்த்தையை பயன்படுத்தினால் கோபம் அடைவார்கள். பின்னர் அதே வார்த்தையை நமக்கு எதிராக பயன்படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள். இவர்கள் குடும்பத்தினர் மற்றும் வேலை செய்யும் இடங்களில் சூழ்ச்சி செய்து அவர்களுக்கு சாதகமான விஷயங்களை செய்து கொள்வார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் மனித உளவியலைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். எனவே இவர்கள் மற்றவர்களின் பலங்களையும், பலவீனங்களையும் விரைவாக அடையாளம் கண்டு கொள்வார்கள். தங்கள் நோக்கங்களை அடைவதற்கு மற்றவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவார்கள்.

45
மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்போதும் ஒழுக்கமானவர்கள் மற்றும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் பிறர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து அவர்கள் சொல்லும் வார்த்தைகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பும் வல்லமை கொண்டவர்கள். மேலும் ஒருவரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டால் பல வித்தைகளை கையில் எடுப்பார்கள். மேலும் எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் அவர்களுக்கு தேவையானதை ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் திறமைசாலிகளாக விளங்குவார்கள். தங்கள் திறமையான பேச்சின் மூலம் ஒருவரின் மனதை மாற்றவோ அல்லது தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வைக்கவும் இவர்களால் முடியும்.

55
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ராஜதந்திரம் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் வசீகரத்தைப் பயன்படுத்தி மோதல்கள் இல்லாமல், சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் வல்லவர்கள். பிறரை எளிதில் நம்ப வைத்து அவர்களை தங்களுக்கு உடன்பட செய்ய இவர்களால் முடியும். இவர்கள் ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதை, அவர்களே அறியாத வண்ணம் கச்சிதமாக காய்களை நகர்த்துவதற்கு இவர்களால் முடியும். நல்லிணக்கத்தைப் பேணுகிறேன் என்கிற பெயரில், இரு பக்கமும் பேசி தங்களுக்கு சாதகமான சூழலை இவர்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக தோன்றினாலும், சூழ்ச்சி செய்து எந்த ஒரு காரியமானலும் தாங்கள் நினைத்த வழியில் நடத்திக் காட்டுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories