Astrology: அக்டோபரில் 4 முறை சுக்கிர பெயர்ச்சி.. இந்த ராசிக்காரங்களுக்கு வசதி வாய்ப்புகள் குவியப் போகுது.!

Published : Sep 19, 2025, 10:34 AM IST

Sukra peyarchi palangal 2025: அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் நான்கு முறை பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
சுக்கிர பெயர்ச்சி 2025

நவகிரகங்களில் சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, மகிமை, அன்பை வழங்கும் கிரகமாக விளங்குகிறார். 26 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் இவர், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் சுக்கிரப் பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நான்கு முறை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதி உத்திர நட்சத்திரத்திற்கு செல்லும் அவர், அக்டோபர் 9 கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறார். அக்டோபர் 17 ஆம் தேதி ஹஸ்த நட்சத்திரத்திற்கும், அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கும் செல்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காரணமாக 3 ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.

24
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நடத்தும் இந்த பெயர்ச்சியானது சாதகமான மாற்றங்களை தரக்கூடும். நிதிநிலைமை கணிசமாக மேம்படும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் முழுவதுமாக கைக்கு வந்து சேரும். நீங்கள் சமூகத்தில் உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். சுக்கிரனின் பெயர்ச்சியால் அனைத்து தொழில்முறை திட்டங்களும் வெற்றிகளைப் பெறும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் புதிய பொறுப்புகளை பெறலாம். உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இதன் காரணமாக நீங்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் பெரிய உடல் நலப் பிரச்சினைகளையும் எதிர் கொள்ள மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

34
தனுசு

சுக்கிரனின் அக்டோபர் மாத பெயர்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறவுகள் வலுவடையும். உள்நாடு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலம் நன்மை பயக்கும். சுக்கிர பகவானின் ஆசியால் உங்களின் வசதிகள், ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பங்குச்சந்தை, வணிகம் அல்லது பிற முதலீடுகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதன் மூலம் உங்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.

44
கும்பம்

சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளைத் தரும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம் அல்லது சொத்துக்களை விற்று அந்த பணம் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கலாம். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகவும் திருப்தி அடைவீர்கள். இளைஞர்கள் இலக்குகளை அடைவது எளிதாகிவிடும். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் இணைவதற்கான சூழல் நெருங்கியுள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories