TTD Privilege Policy Changes: உலகிலேயே மிகப்பணக்கார ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருப்பதியில், சமீபகாலமாக நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் குறித்து பார்க்கலாம்.
உலகிலேயே மிகப்பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.96.98 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு பக்தர்கள் தலா ரூ.1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
25
உண்டியல் காணிக்கை
இந்த இமாலய வசூலில் பெருநிறுவனங்களை விட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்களின் பங்களிப்பே மிக அதிகம் என்று கூறப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி: 2,460 பேர் அதிகாரப்பூர்வ கவுன்ட்டர்கள் மூலமும், 2,354 பேர் ஆன்லைன் வாயிலாகவும், 106 பேர் நேரடியாகவும் (ஆஃப்லைன்) நிதியுதவி செய்துள்ளனர்.
புள்ளி விவரத்தின் படி பார்த்தால் 1,246 பக்தர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலும், 1,212 பக்தர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 1,97,888 பக்தர்கள் நன்கொடையாளர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3.38 லட்சம் கோடி ஆகும். இந்த சொத்து மதிப்பு உலகின் பல சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும், கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.1,738 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது, ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.4.75 கோடி வசூலாகியுள்ளது.
தற்போது திருப்பதி கோவிலில் பதிவு செய்யப்பட்ட மொத்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 1,97,888 ஆக உயர்ந்துள்ளது. இதில், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் நன்கொடை கொடுத்தவர்கள். அதேபோல் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் கொடுத்தவர்கள் சுமார் 22,000 பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
55
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதிக்கு வரும் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புத் தரிசனம் உள்ளிட்ட சலுகை விதிகளில் (Privilege Policy) சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.