இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மறக்க முடியாத தருணங்களை அனுபவிப்பீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நண்பர்களின் உதவியுடன் நடைபெறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். அதிகமாக வருமானம் வரும். உங்கள் எதிர்காலத்திற்கான சேமிப்புகளை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் சுப செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று துணையுடன் உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நெருங்கிய நண்பர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு நடக்கும். அதை தலைமையேற்று செய்வீர்கள். சந்தோஷமான மனநிலை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்திலும் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும்.
பரிகாரங்கள்:
இன்று கால பைரவரை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். சனி பகவானின் தாக்கம் குறைவதற்கு மாற்றுத்திறனாளிகள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக வழங்கலாம். ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)