முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாள் உகந்ததாக இல்லை. ஏற்கனவே மேற்கொண்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். இன்றைய தினம் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் அதிக கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.
நிதி நிலைமை:
பொருளாதார ரீதியாக இன்று சற்று ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படலாம். கூடுதல் செலவுகள் ஏற்படும். கடன் வாங்கும் சூழலும் உருவாகலாம். எனவே தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று சக பணியாளர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே பொறுமையுடன் செயல்படவும். வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை வீட்டில் காண்பிக்க கூடாது. இது குடும்ப உறுப்பினர்களுடன் விரிசலை ஏற்படுத்தக்கூடும். கால் வலி போன்ற சிறு உபாதைகள் தோன்றி மறையலாம்.
பரிகாரங்கள்:
இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும். சிகப்பு நிற மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் தானமாக வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)