Saturn Moon Conjunction 2026: பேராபத்து! இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்கள் ரொம்பவே உஷார்! எளிய பரிகாரங்கள் என்னென்ன?

Published : Jun 09, 2026, 07:21 AM IST

Astrology: நவகிரகங்களின் அசைவுகளும், அவற்றின் சேர்க்கைகளும் 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் 3 ராசிக்காரர்கள் ஆரோக்கியம், பணம் மற்றும் பேச்சில் மிகுந்த கவனம் தேவை.

PREV
15
நவகிரகங்களின் சேர்க்கையால் என்ன நடக்கும்?

ஜோதிட ரீதியாக நவகிரகங்களின் அசைவுகளும், அவற்றின் சேர்க்கைகளும் 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், தற்போது மீன ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் மீன ராசிக்குள் சந்திரன் இன்று இணைகிறார்.

25
விஷ யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் சனியும் சந்திரனும் ஒரே வீட்டில் இணைவதை "விஷ யோகம்" என்று அழைப்பார்கள். இந்த யோகம் ஒரு அசுப யோக அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்த கிரகச் சேர்க்கை 12 ராசிகளையும் பாதித்தாலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 ராசிக்காரர்கள் தங்களின் ஆரோக்கியம், பணம் மற்றும் பேச்சில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்கு 8-வது இடத்தில் இந்த அசுப யோகம் உருவாவதால், நீங்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பண இழப்புகள் வரலாம் என்பதால், புதிய முதலீடுகள் மற்றும் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. தேவையற்ற சிந்தனைகளால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் தங்களின் உடல்நலத்தில் சிறு குறைபாடு தோன்றினாலும் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது ரொம்ப நல்லது. இந்த யோகத்தின் வீரியத்தைக் குறைக்கத் தினமும் 'ஹனுமான் சாலிசா' பாராயணம் செய்வது உங்களுக்கு மன தைரியத்தையும் நிம்மதியையும் தரும்.

Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?

45
துலாம்

துலாம் ராசிக்கு 6-வது வீட்டில் இந்த விஷ யோகம் அமைவதால், உங்கள் வேலைகளில் சில தேவையற்ற இழுபறிகள் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருங்கள்; மறைமுக எதிரிகளால் சிறு தொல்லைகள் வரக்கூடும். பண விவகாரங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். இந்த காலகட்டத்தில் யாரையும் மிக எளிதாக நம்பிவிட வேண்டாம். பயணங்களின் போது உங்களது பணம் மற்றும் உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். இந்த அசுப பலன்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள துர்கா தேவியை மனதார வழிபடலாம்.

55
கும்பம்

கும்ப ராசிக்கு 2-வது வீடான குடும்ப ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நிகழ்வதால், குடும்ப அமைதிக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரமிது. தேவையற்ற வீண் செலவுகள் உங்கள் கைகளைக் கடிக்கலாம். எனவே, வரவுக்கேற்றபடி செலவுகளைத் திட்டமிட்டு பட்ஜெட்டைத் தக்க வையுங்கள். பேசும் போது வார்த்தைகளைத் அளந்து பேசுங்கள். கோபத்தில் பேசும் ஒரு சில வார்த்தைகள் தேவையற்ற வாக்குவாதங்களை உருவாக்கி, திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தலாம். குடும்பத்தினரின் உடல்நலனிலும் அக்கறை காட்டுங்கள். இந்த தோஷத்தின் தாக்கத்தை முறியடிக்கச் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பது நன்மையை கொடுக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories