கன்னி :
கன்னி ராசிக்கார்கள் பொதுவாகவே எதையும் ஆய்வு செய்பவர்களாகவும், உன்னிப்பாக கவனிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் தங்கள் துணையிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தை இவர்கள் அடிக்கடி பாராட்டுவார்கள். எனவே கன்னி ராசிக்காரர்கள் உடல் ரீதியான அழகை விட, ஆழமான அறிவு, தீவிரமான புரிதல் கொண்ட பெண்களை விரும்புவார்கள். எனவே புத்திசாலித்தனமாக இருக்கும் பெண்களிடம் இவர்கள் எளிதாக பிணைப்பை ஏற்படுத்துவார்கள்.