கிரகங்கள் பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றன. அப்போது சில நேரங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள், 12 ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 500 ஆண்டுகளுக்கு பிறகு கேதார ராஜ யோகம் உருவாகி உள்ளது. எப்போது 7 கிரகங்கள் 4 ராசிகளில் உள்ளதோ அப்போது கேதார ராஜயோகம் உருவாகும்.
இந்த ராஜயோகம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும், லாபமும் வெற்றியும் கிடைக்கும். எனவே இந்த கேதார ராஜ யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளது. மேலும் சூரியனும், சனி பகவானும் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளதால் இந்த கேதார ராஜயோகம் திடீர் ராஜயோகத்தை உருவாக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் இருக்கும். சிலருக்கு புதிய வருமானம் கிடைக்கும். புதிய வேலை தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மொத்தத்தில் உங்களுக்கு இது அதிர்ஷ்டமான காலம்.
Gemini daily horoscope
மிதுனம் :
மிதுன ராசிக்கார்கள் கேதார ராஜ யோகத்தால் நல்ல பலன்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். காதலர்களின் காதல் விவகாரத்தை பெற்றோர் ஏற்றுகொள்வார்கள் இந்த காலக்கட்டத்தில் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வேலை தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
Libra and Aquarius
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் கேதார ராஜ யோகத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். விளையாட்டு, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்த காலக்கட்டத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள்.