Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Thai Matha Rasi Palan 2026 Dhanusu: தனுசு ராசி நேயர்களே பிறக்க இருக்கும் தை மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களையும், சில பொறுப்புகளையும் வழங்க இருக்கிறது. மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தினமும் நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். தன ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்குகின்றனர். எனவே பொருளாதார மேம்படும். கடன் பிரச்சினைகள் தீரும்.
25
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர கதியில் பயணிக்கிறார். உங்கள் ராசிநாதனாகவும் நான்காம் இடத்தின் அதிபதியாகவும் இருக்கும் அவர் வக்ரம் பெறுவது நன்மையைத் தர இருக்கிறது. இழந்த அனைத்தையும் தை மாதம் முதல் மீட்டு எடுக்கத் தொடங்குவீர்கள். இடம் வாங்குவது, நிலம் வாங்குவது, வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தின் ஒற்றுமைக்கு பாதகம் விளைவித்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.
பத்திரப்பதிவு மற்றும் நிலப்பதிவு போன்றவற்றிலிருந்த தடைகள் அகலும். குருவின் பார்வை ராசியில் விழுவதால் ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தடைபட்டு நின்ற காரியங்கள் நடைபெறத் தொடங்கும் குரு பார்வை 3 மற்றும் 11 ஆகிய இடங்களில் விழுவதால் உடன்பிறப்புக்களின் ஆதரவு கிடைக்கும். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
35
புதன் சஞ்சார பலன்கள்:
தனுசு ராசிக்கு 7 மற்றும் 10 ஆகிய இடங்களின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். அவர் 29-01-2026 சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக திருமணம் ஆகாமல் இருந்து வரும் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் முயற்சிகள் கைகூடும். வேலையில்லாமல் தவித்து வரும் வாழ்க்கை துணைக்கு வேலை கிடைக்கலாம்.
உபரி வருமானங்கள் அதிகரிக்கும். கடல் கடந்து வேலை செய்ய முயற்சிப்பவர்களின் கனவு நனவாகும். தொழிலில் கணிசமான தொகை லாபமாக கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வருவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் கிடைக்கும் மாதமாக இருக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கைகூடும் சூழல் உருவாகும்.
சுக்கிர பகவான் தனுசு ராசியின் 6, 11 ஆகிய வீடுகளின் அதிபதியாவார். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பது யோகத்தை தர இருக்கிறது. தனாதிபதி சனியோடு சேர்வதால் தனவரவு தாராளமாக இருக்கும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல் நாட்டு தொடர்பான முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும்.
தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல வழி பிறக்கும். உடன் பிறந்தவர்களின் வீடுகளில் சுப நிகழ்வுகள், கிரகப்பிரவேசம் ஆகியவை நடக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை நிகழும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும்.
55
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். சுண்டல் மற்றும் எலுமிச்சை பழ சாதம் நைவேத்யம் செய்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது கிரகங்களால் உண்டான தோஷத்தை குறைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது மன தைரியத்தை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)