தை மாத ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு தை முதல் டாப் கிளாஸ் யோகம்.! தொட்டதெல்லாம் தூள் பறக்கும்.!

Published : Jan 14, 2026, 03:48 PM IST

Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
கிரக நிலைகள்:

Thai Matha Rasi Palan 2026 Viruchigam: விருச்சிக ராசி நேயர்களே இந்த மாதம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகிறது. ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். லாப இடத்தின் அதிபதி புதனும், தொழில் ஸ்தானத்தின் அதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதன் காரணமாக செல்வம் உயரும். 

முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். தொழிலில் புதிய வெற்றிகள் கிடைக்கும். மனம் மகிழும் வகையில் செய்திகள் கிடைக்கும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை உயரும். அனைத்து வழிகளிலும் ஏற்றமும், மாற்றமும் கிடைக்கும் நேரமாக இருக்கும்.

25
குரு சஞ்சார பலன்கள்:

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர கதியில் பயணிக்கிறார். குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய வீடுகளில் விழுகிறது. எனவே இந்த வீடுகள் புனிதமடைந்து அற்புதமான பலன்களைத் தர இருக்கிறது. விருச்சிக ராசியின் தன பஞ்சமாதிபதி குரு வக்ரம் பெற்று பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். மிகப்பெரிய தொகை கைகளில் புரளும் சமூகத்தில் அந்தஸ்து உயரும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு போனஸ், சம்பள உயர்வு, பாராட்டுக்கள், விருதுகள் கிடைக்கக்கூடும். புதிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம்.

35
புதன் சஞ்சார பலன்கள்:

விருச்சிக ராசியின் 8 மற்றும் 11ஆம் வீடுகளின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். அவர் 29-01-2026 சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 

குழந்தைகளின் கனவுகளை நினைவாக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். புதிய வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து கை நிறைய ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

45
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:

விருச்சிக ராசிக்கு 7, 12 ஆகிய வீடுகளின் அதிபதியான சுக்கிரன் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நேரத்தை வழங்க இருக்கிறது. வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறும். சொந்தமாக வீடு கட்டி குடியேறுவீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களின் சேர்க்கை நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். 

வேலையில்லாமல் இருந்து வரும் வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். உபரி வருமானத்தால் செல்வம் பெருகும். வாங்கிய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கணிசமாக அதிகரிப்பார்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சுயமாக சம்பாதிக்கும் பெண்கள் புதிய சொத்துக்களை வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள்.

55
பரிகாரங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மன நிம்மதியை தரும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது நல்லது. தினமும் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது தைரியத்தை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories