தை மாத ராசி பலன் 2026: குருவின் அருளால் துலாம் ராசிக்கு கொட்டும் லாபம்.! தை மாதத்துடன் எல்லா பிரச்சனைகளும் முடியப்போகுது.!

Published : Jan 14, 2026, 02:44 PM IST

Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
கிரக நிலைகள்:

Thai Matha Rasi Palan 2026 Thulam: பிறக்க இருக்கும் தை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். வாழ்வில் இருந்த தேக்க நிலைகள் மாறி புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்கிரன் புதனுடன் இணைந்து புத சுக்கிர யோகத்தை வழங்குகிறார். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. 

குரு பகவான் வக்ரம் பெற்றிருப்பது உங்களுக்கு யோகத்தை வழங்கும். கடந்த காலத்தில் தடைபட்டு நின்ற காரியங்கள் தற்போது வேகமெடுக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகன்று, புதிய உற்சாகத்துடன் தொடங்குவீர்கள்.

25
குரு சஞ்சார பலன்கள்:

மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் பயணிக்கிறார். அவரது பார்வை மூன்று மற்றும் ஐந்தாம் வீடுகளில் விழுகிறது. குரு பகவான் உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்தின் அதிபதியாவார். மேலும் அவர் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிக்கும் ஆறாம் இடத்தின் அதிபதியாகவும் விளங்குகிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும். 

ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறுவீர்கள். குருவின் பலத்தால் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினைக்கு ஒத்துவராமல் இருந்த உடன் பிறந்தவர்கள் மனம் மாறுவார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். 

இடம் வாங்க, வீடு கட்ட பண உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

35
புதன் சஞ்சார பலன்கள்:

துலாம் ராசியின் 9 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகத்தை வழங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். 

எந்த ஒரு வேலையும் எளிதாக முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். தாய்மாமன் அல்லது மைத்துனர் வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழந்த செல்வத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் உருவாகும்.

45
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:

உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் அதிபதியான சுக்கிர பகவான் பிப்ரவரி 7, 2026 பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பிள்ளைகளால் விரயம் ஏற்படக்கூடும். எனவே அவர்களை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி அல்லது திருமணம் சம்பந்தமாக தடைபட்ட முயற்சிகள் மீண்டும் கை கூடலாம். 

இடமாறுதல் அல்லது பணி மாறுதல் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படலாம். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் ஆர்டர்கள் வரக்கூடும். உங்கள் பெயரில் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

55
பரிகாரங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும். தை மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில் திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது நல்லது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று ஒருவேளை உணவுக்கான ஏற்பாடுகளை செய்வது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories