Thai Matha Rasi Palan 2026: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பிறக்க இருக்கும் தை மாதம் உங்களுக்கு வாழ்வில் பல சாதகமான மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் செவ்வாய் பகவானுடன் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று சுப கிரகங்களிலும் இணைந்து இருக்கின்றனர்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதியான சூரியனோடு செவ்வாய் இருப்பதால் இந்த மாதம் இனிமையான மாதமாக இருக்கும். பூர்வ புண்ணியத்தின் பல நாள் கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் இந்த மாதம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானின் நிலை காரணமாக இந்த மாதம் முழுவதும் லாபம் அதிகரித்து காணப்படும்.
25
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் இருக்கிறார். மேஷ ராசியின் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு குரு பகவான் அதிபதியாவார். பாக்கியம் மற்றும் விரய ஸ்தானத்தின் அதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவதால் இந்த மாதத்தில் சுப விரயங்கள் அதிகரிக்கும். சுப காரியங்கள் நம் வீட்டில் நடைபெறவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் நடைபெறும். இந்த மாதத்தில் சுப செய்திகளால் உங்கள் மனம் மகிழும்.
குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய வீடுகளில் விழுவதால் அந்த இடங்கள் புனிதமடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ திருமணம் முடிவாகும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு முயற்சிகள் சாதகமாகும். தந்தை வழியில் இருந்த பிரச்சனைகள் மறையும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் தனியாக தொழில் தொடங்குவீர்கள். இருப்பினும் சொத்துப் பிரச்சனைகள், பாகப்பிரிவினைகள், சகோதரர்களுடன் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையிலேயே நீடிக்கும்.
35
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:
மகர ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான் பிப்ரவரி 7ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மேஷ ராசியின் இரண்டு மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பண வரவு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மனம் மகிழும் வண்ணம் ஏராளமான சம்பவங்கள் நடைபெறும்.
வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். சகோதரர்களுடன் இருந்த பகை மறையும். வாடகை கட்டிடத்தில் செய்து வருபவர்கள் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் புதிய உயரங்களைத் தொடும். மாணவ, மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். சுயமாக சம்பாதிக்கும் பெண்கள் இல்லம் வாங்கி குடியேறும் சுப நிகழ்வுகளும் நடைபெறலாம்.
மேஷ ராசியின் மூன்று மற்றும் ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான புதன் பகவான் 29-01-2026 கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம் மிகவும் சுபமானதாக கருதப்படுகிறது. ஜனவரி 29ம் தேதிக்குப் பின்னர் சகோதரர்களிடையே நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். வேலையில்லாமல் தவித்து வரும் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு கடன் உதவிகள், வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வருமானம் பெருகும். உபரி வருமானங்களால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தாய்மாமன் அல்லது மைத்துனர் வழியில் ஆதாயங்கள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
55
பரிகாரங்கள்:
தை மாதங்களில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அல்லது வடை மாலை சாற்று வழிபடுவது தடைகளை நீக்கும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்குவது அல்லது வஸ்திர தானம் வழங்குவது நன்மைகளைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)