Surya Grahan 2026: பண இழப்பு, மன உளைச்சல்.! 2026-ன் முதல் சூரிய கிரகணத்தால் 3 ராசிகளுக்கு கண்டம்? நிலைகுலையப் போகும் ராசிகள் இவைதான்.!

Published : Jan 13, 2026, 01:08 PM IST

Surya Grahan 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி மாதம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
14
Surya Grahan 2026

2026-ன் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ல் நிகழ இருக்கிறது. இது கும்ப ராசியில் நடப்பதால் 3 ராசிகளின் மனநிலை, ஆரோக்கியம், நிதி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறு தவறுகளால் பெரிய நஷ்டம் வரலாம். வாழ்வில் எதிர்பாராத சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/surya-peyarchi-2026-in-makara-rasi-will-bring-luck-and-money-to-5-zodiac-signs-3t9ybfz

24
சிம்மம்

2026 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் முதல் சூரிய கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிக அதிகமாக இருக்கும். சிம்ம ராசிக்கு மரியாதை குறையும். இந்த காலக்கட்டத்தில் அதிக உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் மன அழுத்தம், சண்டைகள் ஏற்படலாம். ஆணவத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை. இல்லையெனில் சிக்கல்கள் அதிகரிக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-transit-2026-rahu-budh-yuti-in-kumbh-rashi-3-lucky-zodiac-signs-n9rnmxb

34
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு சூரிய கிரகணம் மிகவும் ஆபத்தான காலத்தை தரும். விருச்சிக ராசியினருக்கு பிப்ரவரி இரண்டாம் பாதியில் திடீர் மற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பணம் விஷயங்களில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் சிக்கலைத் தரும். முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனத்துடன் இருக்கவும்.

44
கும்பம்

கும்ப ராசிக்கு சூரிய கிரகணத்தால் பல பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எழலாம். வீட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக தூக்கமின்மை ஏற்படும். உடல்நலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க கூடாது அது பெரிய பெண் விளைவுகளை ஏற்படுத்தலாம் முடிவெடுப்பதில் குழப்பம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதியையும் தராதீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories