18 ஆண்டுகளுக்குப் பிறகு புதனுடன் கைகோர்க்கும் ராகு.! வறுமையிலிருந்து விடுபடப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!

Published : Jan 13, 2026, 10:37 AM IST

Rahu Transit 2026 : ஜோதிடத்தின்படி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் மற்றும் ராகுவின் அரிய சேர்க்கை நிகழ உள்ளது. இது மூன்று ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொண்டு வர உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
Rahu Transit 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த சமயங்களில் அவை பிற கிரகங்களுடன் சேர்க்கையை உருவாக்கும். இதன் காரணமாக உருவாகும் சுப அல்லது அசுப யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பிப்ரவரி 2026ல் புதன், ராகு சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நடக்கப் போகிறது. இதன் விளைவாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த ராசிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

24
மேஷம்

ராகு, புதன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இந்த சேர்க்கை லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் பெறுவீர்கள். இதனால், உங்கள் வருமானம் கணிசமாக உயரும். கடந்த காலம் செய்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் இருந்தும் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, நிலம், மனை, வீடு போன்ற அசையா சொத்துக்களில் முதலீடுகளை தொடங்குவீர்கள்.

34
மிதுனம்

புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளையும், லாபங்களையும் தரும். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உருவாகிறது. எனவே இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு அல்லது பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

44
கும்பம்

புதன், ராகு சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களைத் தரும். இந்த சேர்க்கை உங்கள் ஜாதகத்தின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் உருவாகிறது. இதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல பதவி உயர்வு பெறுவீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருப்பவர்களுக்கு வருமானம் உயரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்களிடையே பெயர், புகழ், மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories