Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Thai Matha Rasi Palan 2026 Magaram: மகர ராசி நேயர்களுக்கு இந்த மாதம் பல நன்மைகள் தேடி வரும் மாதமாக இருக்கும். இருப்பினும் ஏழரை சனிகள் இறுதி கட்டம் நடப்பதால் சில விஷயங்களில் நிதானம் தேவை. மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் சனி பகவான் தன ஸ்தானத்தில் பலம் பெறுகிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை மகர ராசியில் இருப்பதால் நல்ல காரியங்கள் நடைபெறும். எதிரிகள் விலகுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பரம்பரை சொத்துக்கள் மூலம் ஆதாயமும், நன்மையும் ஏற்படும்
25
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியின் 3 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதியான குரு பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உங்கள் நண்பர்கள் சரியான சமயத்தில் கை கொடுத்து உதவுவார்கள். சிறு சிறு உடல் நல தொந்தரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாக சரியாகும். வாங்கிய கடன்களை திருப்பி அடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய வீடுகளில் விழுகிறது. எனவே அதற்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கவில்லையே என்ற கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணையலாம். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் கனவு நனவாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சுயதொழில் கனவு நனவாகும்.
35
புதன் சஞ்சார பலன்கள்:
மகர ராசியின் ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதியான புதன் பகவான் 29-01-2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டம் தொழில் ரீதியான மாற்றங்களைத் தரும். பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பணிபுரிவர்களுக்கு கிடைக்காத நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
இலாகா மாற்றம், இடம் மாற்றங்கள் ஆகியவை உறுதியாகும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள், மன ஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் பங்கு பிரித்துக் கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் பிப்ரவரி 7ஆம் தேதிக்குப் பின்னர் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த காலத்தில் இனிய பலன்கள் கிடைக்கும். ராசியின் 5 மற்றும் 10ஆம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானத்திற்கு வருவது நல்லதாக கருதப்படுகிறது. தேவைகள் பூர்த்தியாகும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சக ஊழியர்கள் அல்லது மேல் அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார்கள். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப காரியம் குறித்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றமடையும்.
55
பரிகாரங்கள்:
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது சனி பகவானின் தோஷத்தை குறைக்க உதவும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். விநாயகருக்கு வாழைப்பழத்தால் கட்டப்பட்ட மாலை சாற்றி வழிபடுவது திருமணத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)