Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Thai Matha Rasi Palan 2026 Kumbam: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் காலம் நடந்து கொண்டிருந்தாலும் சூரியனின் சஞ்சாரம் மற்றும் பிற கிரகங்களின் நிலையை பொறுத்து சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் கைகோர்த்து இருக்கிறார்.
மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் இனியதாக அமையும். அனைத்தையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உற்சாகமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். ஜென்ம சனி காரணமாக ஆரோக்கியத்தில் சிறுசிறு கோளாறுகள் ஏற்படலாம்.
25
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தனம் மற்றும் லாப ஸ்தானத்தின் அதிபதியான குரு பகவான் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானத்தில் சில பற்றாக்குறைகள் ஏற்படலாம். குருவின் பார்வை உங்கள் ராசியில் விழுவதால் தேவைக்கு ஏற்ப மட்டுமே பண வரவு இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சி தாமதம் அடையலாம். இருந்தாலும் கடைசி நேரத்தில் அது கைகூடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
குருவின் பார்வை ராசியில் மட்டுமல்ல. 9, 11 ஆகிய வீடுகளிலும் விழுகிறது. இதன் காரணமாக பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே தந்தை வழி உறவுகளில் இருந்த விரிசல்கள் அகலும். தடை கற்கள் படிக்கற்களாக மாறும். உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். நிலம் வாங்குவது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கூட்டாளிகளை விடுத்து புதிய கூட்டாளிகளுடன் உத்தியோகத்தை தொடங்குவீர்கள்.
35
புதன் சஞ்சார பலன்கள்:
கும்ப ராசியின் 5 மற்றும் 8 ஆம் வீடுகளின் அதிபதியான புதன் பகவான் ஜனவரி 29 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக நன்மை, தீமை இரண்டும் கலந்து கிடக்கும். பொதுவாக பஞ்சம ஸ்தானதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
பெண் பிள்ளைகளுக்கு திருமண யோகம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கடந்த மாதத்தில் நடைபெறாமல் இருந்த காரியங்கள் இந்த மாதம் நடக்கும்.
சுக்கிர பகவான் பிப்ரவரி 7 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் உங்கள் ராசியின் நான்கு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதியாவார். ஜென்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது தாய் வழி ஆதரவை அதிகரிக்கச் செய்யும். கல்வி தொடர்பான முயற்சிகள் கைகூடும். அரசு வேலை கிடைக்கும். வாழ்க்கையின் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.
சொந்த வீடு வாங்கி குடியேறும் யோகம் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தலைமை பதவிகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு சுப காரியங்கள் குறித்த பேச்சுக்கள் முன்னேற்றத்தை அடையும்.
55
பரிகாரங்கள்:
சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. விஷ்ணு ஆலயங்களில் கற்கண்டு நைவேத்யம் படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது பலன்களை அதிகரிக்கும். முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)