இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை கல்யாணம் பண்ற பையனுக்கு ராஜயோகம்!!

Published : Jun 13, 2025, 04:06 PM IST

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரின் வெற்றிக்கு காரணமாகிறார்கள். இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
16
சுவாதி நட்சத்திரம்

ஜோதிடத்தின் படி, பிறந்த தேதி, ராசி மட்டுமல்ல நட்சத்திரமும் ஆளுமை பற்றி சொல்லுகின்றது. அதுவும் குறிப்பாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யும் கணவன் கொடுத்து வைத்தவர். ஏனெனில் மென்மையானவள், அமைதியானவள், சுதந்திரமானவள் மற்றும் அழகானவள். மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். வெற்றிக்கு இவர்கள் தான் காரணம். விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்த சுவாதி நட்சத்திரத்தில் தான் பிறந்தவர்.

26
கடவுள் பக்தி உள்ளவர்கள்

ஜோதிடத்தின்படி, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவரின் அதிர்ஷ்டத்திற்கு காரணமாகிறார்கள். மேலும் அவர்களுக்கு மத நம்பிக்கை அதிகமாகவே இருக்கும். இதனால் அவர்கள் சடங்குகளை பின்பற்றுவார்கள். தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தினமும் பிரார்த்தனை செய்வார்கள்.

36
சிறந்த மனைவியாவாள்

ஜோதிடத்தின் படி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அடக்கமானவள், அர்ப்பணிப்பானவள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவள். இந்த குணங்களால் அவள் சிறந்த மனைவியாக கருதப்படுகிறார். மேலும் அவளது சுதந்திரமான சிந்தனையே அவளின் சிறப்பு.

46
குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பாள்

சுவாதி நட்சத்திரம் உள்ள பெண்கள் குடும்பத்திற்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். மேலும் தங்கள் கணவரின் உணர்ச்சி ரீதியாக எப்போதுமே துணை நிற்பார்கள். கஷ்ட காலங்களில் கணவருக்கு நண்பனைப் போல ஆதரவளிப்பாள்.

56
வார்த்தையில் அல்ல.. செயலில் அன்பு!

சுவாதி நட்சத்திர பெண்கள் தங்கள் அன்பை வார்த்தைகள் அல்ல, செயல்களால் வெளிப்படுத்துவார்கள். அவர்களது இயல்பு அமைதியான குணம் என்பதால் திருமண வாழ்க்கை எப்போதுமே நன்றாக இருக்கும்.

66
கணவரின் வெற்றி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இத்தகையவர்கள் தங்கள் கணவருக்கு உத்வேகம், வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories