Astrology: செப்.21 கன்னி ராசியில் நிகழும் சூரிய கிரகணம்.! இந்த 4 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.!

Published : Sep 19, 2025, 12:19 PM IST

Surya Grahanam 2025: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025 அன்று நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளை அனுபவிக்க இருக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சூரிய கிரகணம் - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

இந்து மதத்தின் படி சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் அசுப பலன்களைத் தரும் என்றே நம்பப்படுகிறது. இந்த ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஞாயிறு அன்று மஹாளய அமாவாசை தினத்தில் நடைபெற உள்ளது. இந்த கிரகணம் கன்னி ராசியில் நடைபெற இருக்கிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் ஜாதகத்திலும் எதிரொலிக்க இருக்கிறது. குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் மோசமான பலன்களைத் தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். கிரகண காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களைத் தரும். மேஷ ராசியின் ஆறாவது வீட்டில் இந்த கிரகணமானது மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. எனவே இவர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். தொழில் ரீதியான பின்னடைவு, உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஆகியவற்றை சந்திக்க கூடும். தொழில் வாழ்க்கை அல்லது முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம். உங்கள் சேமிப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றிலும் தோல்வி ஏற்படலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். கடுமையான நிதி நெருக்கடி உண்டாவதால் மன அழுத்தமும் அதிகரிக்கலாம்.

35
சிம்மம்

சிம்ம ராசியினரின் இரண்டாவது வீட்டில் இந்த கிரகணம் மாற்றங்களை நிகழ்த்தவுள்ளது. இதன் காரணமாக உடல் நலப் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மேலும் உடல்நிலை மோசமாகலாம். மருத்துவமனைக்கு அதிக செலவு செய்யும் சூழல் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையிலும் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். வருமானம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்த அடுத்த சவால்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி தவிப்பீர்கள். குடும்பத்தினருடன் பிரச்சனைகள் ஏற்படும். அலுவலகத்திலும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

45
கன்னி

இந்த சூரிய கிரகணமானது கன்னி ராசியில் நிகழவுள்ளது. கன்னி ராசியை ஆளும் புதன் பகவான், தனது சொந்த ராசிக்குள் பிரவேசித்திருப்பதால் கன்னி ராசிக்கு நன்மை தீமை என இரண்டும் கலந்த கலவையான பலன்கள் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை அதிகரிக்கும். குடும்ப பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீடு அதிகரிக்கும் இதன் காரணமாக மேலும் சிக்கல்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மன அமைதி சீர்குலையும். பதற்றத்துடன் முடிவுகள் எடுப்பது, தேவையற்ற வாக்குவாதங்கள், வீண் பேச்சுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எதையும் எடுக்காமல் ஆழமாக சிந்தித்து அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

55
கும்பம்

சூரிய கிரகணமானது கும்ப ராசியின் எட்டாவது வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் கடினமாக உழைக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். வேலையில் திருப்தி இல்லாமல் பணி மாறுதலுக்காக அலைய வேண்டியிருக்கும். நீங்கள் பல சவால்களை சந்தித்து முன்னேறினாலும் அதற்கான பலன்கள் கிடைக்காது. உற்சாகத்தை இழந்து தவிக்க நேரிடலாம். தொழில் வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி சார்ந்த பிரச்சனைகள், மருத்துவ செலவுகள், உடல் நலனில் பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்வீர்கள். குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகலாம். கல்வி விஷயத்திலும் மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படலாம். எனவே அடுத்த சில தினங்களுக்கு நீங்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories