Astrology: ஒரே ராசியில் இணையும் சூரியன் - சந்திரன்.! நடக்கப்போகும் பிரளயம்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் 3 ராசிக்காரர்கள்.!

Published : Oct 07, 2025, 02:06 PM IST

Surya Chandra Yuti: நீண்ட வருடங்களுக்குப் பிறகு சூரியன் மற்றும் சந்திரன் இரண்டு கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசியில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
துலாம் ராசியில் இணையும் சூரியன் சந்திரன்

ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் அக்டோபர் 17 பிற்பகல் 01:53 மணிக்கு சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இவர் நவம்பர் 16 ஆம் தேதி வரை துலாம் ராசியில் இருப்பார். இந்த நிலையில் அக்டோபர் 21 காலை 9:35 மணிக்கு சந்திர பகவானும் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கை மங்களகரமானதாக கருதப்படுகிறது.

25
சூரியன் சந்திரன் சேர்க்கை

ஜோதிடத்தில் இரண்டு முக்கிய கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பாதிப்பு உலகம் முழுவதும் தெரியும். 12 ராசிக்காரர்களுக்கும் இந்த இணைவு சிறப்புப் பலன்களை கொடுத்தாலும், மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமைய உள்ளது. இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சந்திர பகவான் அக்டோபர் 23 வரை துலாம் ராசியில் இருக்கிறார். எனவே அக்டோபர் 21 துவங்கி அக்டோபர் 23 வரையிலான மூன்று நாட்கள் மூன்று ராசிகளுக்கு பலன்களை அள்ளி வழங்க உள்ளது.

35
துலாம்
  • சூரியன் சந்திரன் சேர்க்கை துலாம் ராசியின் லக்ன வீட்டில் நடைபெற இருக்கிறது. 
  • இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்க இருக்கிறது. 
  • இவர்கள் வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். 
  • முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும். 
  • உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். 
  • முடிவெடுக்கும் திறன் மேம்படும். 
  • குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும். 
  • குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். 
  • உறவுகளிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். 
  • வணிகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். 
  • கடின உழைப்புக்கான பலன்களும், அங்கீகாரமும் கிடைக்கும்.
45
சிம்மம்
  • தீபாவளி சமயத்தில் உருவாகும் சூரியன் மற்றும் சந்திரனின் இணைவு சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உள்ளது. 
  • குடும்ப உறவுகள் வலுவடையும். குடும்ப உறவுகள் மூலமாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 
  • நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருபவர்கள், சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். 
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். 
  • புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். 
  • வணிக முயற்சிகள் வெற்றி பெறும். 
  • மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் மேம்படும். 
  • தன்னம்பிக்கை பெருகும். 
  • பெரியவர்களின் ஆசியுடன் வரும் காலம் மங்களகரமானதாக இருக்கும்.
55
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு சூரிய சந்திரன் இணைவு மன நிம்மதியை தரும். 
  • நீண்ட காலமாக மன அழுத்தம் அல்லது பதற்றமால் போராடி வருபவர்கள் இனி அமைதியைக் காண்பீர்கள். 
  • உங்களின் தன்னம்பிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும். 
  • குழப்பத்தில் தவித்து வந்தவர்கள் இனி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். 
  • வாழ்க்கை நிலையானதாக மாறும்.
  •  உங்கள் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். 
  • முடிவெடுப்பதில் முன்னேற்றம் ஏற்படும். 
  • நிலம் அல்லது வீடு வாங்குவது போன்ற விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். 
  • நிதி ரீதியாகவும் இந்த காலம் சாதகமாக இருக்கும். 
  • நிலுவையில் இருந்த பணம் மீட்கப்படும். 
  • புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். 
  • வாழ்க்கை இனிமையானதாக மாறும்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories