ஏற்கனவே துலாம் ராசியில் புதன் பகவான் பயணித்து வரும் நிலையில் இருவரும் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். புதன் பகவான் பேச்சு, அறிவு, புத்திசாலித்தனம், வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சூரிய பகவான் தன்னம்பிக்கை, தைரியம், ஆற்றல், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக உருவாகும் புதாதித்ய ராஜயோகம் சில ராசிகளின் வாழ்க்கையில் நன்மைகளை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.