Astrology: சூரியன்-புதன் இணைவால் உருவான அஷ்டதச யோகம்.! 4 ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை கிடைக்கும்.!

Published : Dec 01, 2025, 10:26 AM IST

Astadash Yog 2025: சூரியன் மற்றும் புதன் இருவரும் இணைந்து அஷ்டதச யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
அஷ்டதச யோகம் 2025

ஜோதிடத்தில் கிரகங்களின் இணைப்புகள் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றன. கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் நவம்பர் 30, 2025 இரவு 11:45 மணிக்கு சூரியன் மற்றும் புதன் இருவரும் ஒன்றுக்கொன்று 18 டிகிரி கோணத்தில் அமைந்து அஷ்டதச யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டதச யோகம் தொழில் ரீதியான முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலையிடத்தில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கி புதிய உற்சாகம் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும். நிதி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். வணிகத்தில் முதலீடுகள் நல்ல வருமானத்தை தரும். புதிய கூட்டாண்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

35
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டதச யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். புதன் பகவானின் செல்வாக்கு காரணமாக புத்திசாலித்தனம் அதிகரிக்கும். ஆளுமைத்திறன் மேம்படும். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. நிதி நிலைமை மேம்படும். கைக்கு வராமல் இருந்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதம் அதிர்ஷ்டத்தை அளிக்கும். தொழில் ரீதியாக பெரிய வெற்றியை அடைவீர்கள். புதிய திட்டங்களை உருவாக்கி தொழிலில் புதிய உச்சங்களைப் பெறுவீர்கள். உங்கள் தலைமைத்துவம் பாராட்டப்படும். நிதி ரீதியாகவும் இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்குள் மரியாதை உயரும். சமூக அந்தஸ்து வலுவடையும். வணிக விரிவாக்கத்திற்கு மிகவும் பயனுள்ள நாட்களாக இருக்கும்.

55
கன்னி

கன்னி ராசியின் அதிபதியாக புதன் விளங்கி வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகம் எடுக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் நிதி விஷயங்களில் நல்ல செய்திகள் வரும். தொழில் செய்து வருபவர்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். பின்னடைவை சந்தித்து வந்த தொழில் முன்னேற்றத்தை அடையும். தொழில் போட்டியாளர்கள் எதிரிகள் விலகுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories