December 2025 Meena Rasi Palangal: தொழில் ஸ்தானத்தில் என்ட்ரி கொடுக்கும் கிரகங்கள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கபோகும் மீன ராசிக்காரர்கள்.!

Published : Nov 30, 2025, 05:21 PM IST

This Month Rasi Palan: டிசம்பர் 2025 மீன ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
டிசம்பர் மாத கிரக நிலைகள்:

சூரியன், செவ்வாய், சுக்கிரன்: மாதத்தின் முற்பகுதியில் பாக்கிய ஸ்தானத்திலும், மாதத்தின் பிற்பகுதியில் இந்த கிரகங்கள் பத்தாம் வீட்டிற்கு மாறுவதால் உங்களின் நிலை வலுப்படும்.

குரு: உங்கள் ராசிக்கு உச்ச வீடான கடகத்தில் ஐந்தாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலையாகும்.

சனி: இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியான முதல் வீட்டிலேயே இருப்பார். இது தன்னம்பிக்கையையும், தெளிவான மனப்பான்மையையும் சில சமயங்களில் சவால்களையும் கொடுக்கும்.

பொதுவான பலன்கள்:

இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். உங்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்புத்திறன் மேம்படும். பணியிடத்தில் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். சனி பகவானின் நிலை காரணமாக பொறுப்புகள் அதிகரிக்கும். சில விஷயங்களில் தெளிவான எல்லைகளை வகுக்க வேண்டி இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு செல்வதால் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும், அதே வேளையில் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கடன் கொடுக்கும் விஷயங்களில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் நிதி நிலைமை வலுப்பெறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம்.

தொழில் மற்றும் வேலை:

உங்கள் கடின உழைப்பும், திறமைகளும் பாராட்டப்படும். உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். மாதத்தின் முதல் வாரம் சற்று கடினமாக இருக்கும். அதன் பிறகு சாதகமாக மாறும். வியாபார ரீதியான பயணங்கள் லாபகரமாக அமையும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும். இருப்பினும் சிறிய தொற்று நோய்கள் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகமான அழுத்தம் அல்லது குழப்பமான எண்ணங்களால் தலைவலி ஏற்படும். எனவே தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து, அமைதியாக இருங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

மாணவர்களுக்கு இந்த மாதம் சராசரி மாதமாக இருக்கும். வெற்றி பெற வேண்டுமெனில் கடின உழைப்பும், கூடுதல் முயற்சியும் தேவைப்படும். படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஐந்தாம் வீட்டில் உள்ள குருவின் பார்வை சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அன்பு நீடிக்கும். உறவை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிப்பீர்கள். காதல் உறவுகளுக்கு மாதத்தின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். பிற்பகுதியில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவினர்களுடன் உறவு மோசமடைய வாய்ப்புள்ளதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

பரிகாரங்கள்:

இந்த மாதம் முழுவதும் புதன்கிழமைகளில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபடுவது நல்லது. முடிந்தால் விநாயகருக்கு ஒற்றைப்படையில் குடத்தில் தண்ணீர் ஊற்றி வழிபட தடைகள் நீங்கும். சிவபெருமானை வழிபடுவது சனியின் ஆதிக்கத்தை குறைக்க உதவும். ஏழை எளியவர்களுக்கு உதவுவது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories