சூரியன், செவ்வாய், சுக்கிரன்: 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம்.
குரு: களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சஞ்சாரம்.
சனி: தைரியம், இளைய சகோதரர் ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சாரம்.
புதன்: தொழில் மற்றும் கர்ம ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சாரம்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் சிறப்பாக இருக்கும். உங்கள் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான சூழ்நிலையும், தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கவும், நிதிநிலை மேம்படவும் புதிய வழிகளை காண்பீர்கள்.
நிதி நிலைமை:
மாதத்தின் தொடக்கத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் ஆகியோர் 11வது வீட்டில் இருப்பதாலும் குருவின் நிலை காரணமாகவும் வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ராகு மற்றும் சில கிரக நிலைகளால் செலவுகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள், சகோதரர் வழியில் செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் மூலமும் விரயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
தொழில் மற்றும் வேலை:
உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை செய்து வருபவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய யோசனைகள், திட்டங்கள் மூலம் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். வியாபாரம் செழிக்க வாய்ப்பு உள்ளது.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
மாதத்தின் முதல் பாதி ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். பெரிய உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படாது. மாதத்தில் பிற்பகுதியில் சிறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு இது முக்கியமான காலகட்டமாக இருக்கும். கவனச் சிதறல்கள் உங்கள் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் உழைப்பும், சரியான திட்டமிடலும் தேவைப்படும். கடின உழைப்பிற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
திருமணமானவர்களுக்கு மாதத்தின் முதற்பகுதி அனுகூலமாக இருக்கும். உறவுகள் ஆழமடையும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேச்சில் நிதானம் தேவை. வீட்டில் பதட்டமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்படலாம்.
பரிகாரங்கள்:
சிவபெருமானையும், விநாயகரையும் வணங்குவது தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். சனீஸ்வரனை வணங்குவது உங்கள் ராசிக்கு கூடுதல் ஒழுக்கத்தை தரும். ராகுவின் தாக்கத்தைக் குறைக்க தவறான பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்க்கவும். சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்தால் ஏழைகளுக்கு உணவு அல்லது உதவுவது நற்பலன்களைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)