சூரியன்: டிசம்பர் 15ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் இருப்பார்.
செவ்வாய்: மாதத்தின் தொடக்கத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியோருடன் இணைந்து முதல் வீட்டில் இருப்பார்.
புதன்: மாதத்தின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-வது வீட்டிற்கு பெயர்ச்சியாவார்.
சுக்கிரன்: டிசம்பர் இறுதி வாரம் வரை விருச்சிக ராசியிலும், மாத இறுதியில் தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாவார்.
குரு: மாதத்தின் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் அவர், டிசம்பர் 4 முதல் 8-வது வீட்டிற்கு பெயர்ச்சியாவார்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் உங்கள் குழப்பங்கள் விலகி ஆளுமைத் திறன் மேம்படும். தன்னம்பிக்கை உயர்ந்து துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். செவ்வாய், சூரியன் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குருவின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். டிசம்பர் மாதம் நல்ல மாற்றங்களையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டுவரும் காலமாக இருக்கும்.
நிதி நிலைமை:
மாதத்தின் முதல் பாதியில் செலவுகள் அதிகமாக இருக்கலாம். பிற்பாதியில் முக்கிய நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க துவங்கும். கடன் கொடுக்கும் விஷயங்களில் கவனம் தேவை. ஏனெனில் அது திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு. நிதி சார்ந்த விஷயங்களில் அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
இதுவரை கவனிக்கப்படாத உங்கள் கடின உழைப்பு கவனிக்கப்படும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் திறமைகள் பாராட்டப்படும். வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு மாதத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். உங்கள் பணியில் எவ்வளவு ஆற்றலுடன் இருக்கிறீர்களோ அதே அளவிற்கு வெற்றியை ருசிக்க முடியும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் அல்லது அலர்ஜி போன்ற சிறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம். மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். எனவே உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் மனம் மற்றும் உடல் இரண்டையும் பலப்படுத்தலாம்.
மாணவர்களுக்கு இந்த மாதம் கடின உழைப்பு தேவைப்படும் மாதமாக இருக்கலாம். கவனச் சிதறல்களை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப உறவுகள்:
கடந்த கால பிரச்சனைகள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் சற்று குழப்பங்கள் மற்றும் பதற்றம் நிறைந்ததாக இருக்கலாம். பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. அது சிக்கல்களை தீர்க்க உதவும். திருமணத் தடை விலகி திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவுகளில் உள்ள சிக்கல்களை தவிர்க்க பேச்சு வார்த்தைகளில் நிதானம் தேவை.
பரிகாரங்கள்:
செவ்வாய் உங்கள் ராசிநாதன் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. குருவின் அருள் கிடைக்க தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது நல்லது. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)