சூரியன்: டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது துலாம் ராசியின் மூன்றாம் வீட்டில் நடைபெறுகிறது.
செவ்வாய்: டிசம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது துலாம் ராசியின் மூன்றாவது வீட்டில் நடைபெறும்.
புதன்: டிசம்பர் 6ஆம் தேதிக்குப் பிறகு துலாம் ராசியின் இரண்டாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார்.
சுக்கிரன்: மாதத் தொடக்கத்தில் இரண்டாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனுடன் இணைந்திருக்கும் சுக்கிர பகவான், 20ஆம் தேதிக்குப் பின்னர் மூன்றாம் வீட்டில் தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.
குரு: வக்ர நிலையில் அதிர்ஷ்ட வீடான நான்காம் வீட்டில் நுழைகிறார்.
பொதுவான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, டிசம்பர் மாதம் பல விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் திறமைகளும், கடின உழைப்பும் பாராட்டப்படும். மாதத்தின் மூன்றாம் மற்றும் கடைசி வாரங்கள் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் தொடக்கத்தில் தடைகளை சந்தித்தாலும், இறுதியில் வெற்றியைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையை பலப்படுத்துவதில் அதிக கவனம் தேவைப்படலாம். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். சுப விரயங்கள் ஏற்படும். தந்தையால் ஆதாயம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வேலை:
பணியிடத்தில் உங்கள் முழு திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடம் மூலம் வெளிநாடு செல்வதற்கான சூழல் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கூடி வரும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவை. சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய பிரச்சினைகள் ஏற்படாது என்றாலும், உணவு பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் இனம் புரியாத கவலைகள் வந்து போகலாம். கல்வி தொடர்பான விஷயங்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும். இலக்குகளை அடைய தீவிரமாக படிக்க வேண்டி இருக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கை இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு பல வழிகளில் உங்களுக்கு உதவும். பிள்ளைகளுடன் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடிவாக வாய்ப்பு உள்ளது. தாய் வழி சொந்தங்களிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரங்கள்:
- பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு பானகம் சமர்ப்பித்து வழிபடுங்கள்.
- அன்னதானப் பணிகளுக்கு உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்.
- துர்க்கை அம்மன், விநாயகர், பெருமாள் ஆகியோரை வழிபடுவது நல்லது.
- அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7
- அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனிக்கிழமை
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)