Rahu Shatabhisha Nakshatra Transit 2025: 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சி குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் எப்போதும் பின்னோக்கியே பயணிக்கிறார். வருகிற டிசம்பர் 2, 2025 பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்குள் நுழைய இருக்கிறார். சதயம் என்பது ராகுவின் சொந்த நட்சத்திரமாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்கு திரும்புவது தனிப்பட்ட வாழ்க்கையிலும், உலக அளவிலும் பெரிய மாற்றங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ராகுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் நன்மைகளையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் பெறவுள்ள சில முக்கிய ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெற உள்ளனர். எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திடீர் நிதி ஆதாயங்கள், லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் கைகூடும். வெளிநாடு சென்று பணிபுரிய அல்லது உயர்கல்வி படிக்க நினைப்பவர்களின் கனவுகள் நிறைவேறும். இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருப்பினும், அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
35
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சி சாதகமான முடிவுகளைத் தரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இதுவரை கவனிக்கப்படாத உங்களின் உழைப்பு தற்போது அங்கீகரிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத பண வரவு மற்றும் புதிய நிதி வாய்ப்புகள் உண்டாகும்.
ராகுவின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சியங்களை அடைவதற்கான பாதைகள் தெளிவாகும். தடைபட்டு நின்ற காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். புதிய சொத்துக்கள், வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய சவால்களை சந்தித்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த காலகட்டம் சாதகமாக இருப்பினும் எதையும் அவசரமாக செய்தல் கூடாது. ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பொறுமையாக செயல்பட வேண்டும். செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
55
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டமாக அமையும். உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதையும் செல்வாக்கும் உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)