Astrology: இந்த 5 ராசிக்காரர்களால் அமானுஷ்யங்களை உணர முடியும்.! பேய்கள் கண்ணுக்கு தெரியுமாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Nov 30, 2025, 02:21 PM IST

Zodiac signs connected to the paranormal: ஜோதிடத்தில் சில ராசியைச் சேர்ந்தவர்கள் அமானுஷ்யத்துடன் தொடர்பு கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
அமானுஷ்யத்துடன் தொடர்புடைய 5 ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்களுக்கு அமானுஷ்ய செயல்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத சில விஷயங்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் மற்றும் அதிர்வுகள் பற்றிய அவர்களின் அதீத விழிப்புணர்வு சில சமயங்களில் மற்றவர்கள் கவனிக்காத நிகழ்வுகளையும், கண்ணுக்குத் தெரியாத உலகைப் பற்றிய புரிதல்களையும் வளரச் செய்கிறது. 

இவர்களின் உள்ளுணர்வு, உணர்ச்சி ஆழம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக கண்களால் பார்க்க முடியாத நிகழ்வுகளை உணரக்கூடிய திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அமானுஷ்யத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக கருதப்படும் முக்கியமான ஐந்து ராசிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
மீனம்

மீன ராசி நீர் ராசியாக அறியப்படுகிறது. இது வியாழன் மற்றும் நெப்டியூன் கோள்களால் ஆளப்படுகிறது. நெப்டியூன் என்பது மயக்கம், மாயை, கனவுகள் மற்றும் ஆன்மீக உலகத்துடன் தொடர்பு கொண்டது. மீன ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதீத கற்பனை மற்றும் உள்ளுணர்வு சக்தி கொண்டவர்கள். இவர்களால் ஆவிகள், தேவதைகள் அல்லது இறந்த முன்னோர்களின் வருகையை எளிதாக உணர முடியும். இவர்களின் ஆறாம் அறிவு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இவர்கள் நிஜம் மற்றும் ஆன்மீக உலகங்களுக்கு இடையே எளிதில் பயணிக்க கூடியவர்கள். இதனால் இவர்களுக்கு ஆன்மாக்களின் வருகையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

36
விருச்சிகம்

விருச்சிக ராசியும் நீர் ராசியாக அறியப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தாலும், மாற்றம் மற்றும் மறுபிறப்பின் கிரகமான ப்ளூட்டோவாலும் ஆளப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஆழமான அம்சங்களை ஆராயத் தெரிந்தவர்கள். மரணம், மறுபிறப்பு மற்றும் ஆழமான ரகசியங்கள் இவர்களை ஈர்க்கின்றன. இவர்கள் இருளைக் கண்டு ஒருபோதும் பயம் கொள்வதில்லை. மாறாக அதை புரிந்து கொள்ள முயல்வார்கள். இவர்களது உள்ளுணர்வு மிகவும் கூர்மையாக இருக்கும். அமானுஷ்ய நிகழ்வுகளை எளிதில் அறிந்து கொள்ளும் திறனையும் இவர்கள் பெற்றுள்ளனர். அமானுஷ்யங்களை கண்டு இவர்கள் பயம் கொள்வதில்லை. மாறாக அதை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.

46
கடகம்

கடக ராசியும் நீர் ராசியாக அறியப்படுகிறது. இது சந்திரனால் ஆளப்படும் ராசியாகும். சந்திரன் உணர்ச்சிகள் மற்றும் உள்ளுணர்வை குறிக்கும் கிரகமாகும். கடக ராசிக்காரர்கள் வலுவான உணர்திறன் கொண்டவர்கள். இறந்தவர்களின் ஆன்மாக்கள் இவர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தால், அதை புரிந்து கொண்டு செய்திகளை பெற இவர்களால் முடியும். இவர்களின் அதீத அன்பு மற்றும் பாதுகாப்பு குணம் ஆறுதலையும், புரிதலையும் தேடும் ஆன்மாக்களால் ஈர்க்கப்படும். ஒரு அமைதியான சூழ்நிலையில் இருக்கும் போது மிக நுட்பமான அதிர்வுகளையும் ஆற்றல்களையும் எளிதில் உணரக்கூடியவர்களாக இவர்கள் விளங்குகின்றனர்.

56
தனுசு

தனுசு ராசி நெருப்பு ராசியாகும். இது ஞானம், தத்துவம் மற்றும் அறிவின் கிரகமான குரு பகவானால் ஆளப்படுகிறது. இவர்கள் தங்களது எல்லையைத் தாண்டி அறிவை தேடுபவர்கள். இவர்களுக்கு ஆன்மீகம், தத்துவம், ஆற்றல்கள் பற்றிய அறிவும் புரிதலும் உள்ளது. இவர்கள் புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் பொழுது வரலாற்று முக்கியத்துவத்தை அறியும் அதே சமயத்தில் அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளையும் அறிந்து கொள்வார்கள். இவர்களின் நம்பிக்கையான மற்றும் ஆய்வு செய்யும் குணம் தெரியாத உலகைப் பற்றி ஆராய இவர்களை உந்துகிறது. கண்ணுக்குத் தெரியாத உலகங்களைப் பற்றியும், அது குறித்து ஆய்வு செய்யவும் இவர்கள் முயற்சி செய்கின்றனர்.

66
கும்பம்

கும்ப ராசியானது காற்று ராசியாகும். இது புதுமை மற்றும் அசாத்திய சிந்தனைக்குரிய கிரகமான யுரேனஸால் ஆளப்படுகிறது. கும்ப ராசிக்காரர்கள் அறிவியல் ரீதியாக விளக்க முடியாத விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை வேறுவேறு பரிமாணங்கள் அல்லது தளங்களில் இருந்து யோசிப்பார்கள். அவர்களின் இந்த குணமானது அமானுஷ்ய உலகிற்கும் நீள்கிறது. அவர்கள் அமானுஷ்யங்கள் குறித்தும் பேய்கள் குறித்தும் தீவிரமாக ஆராய்வார்கள். அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவர்களின் இந்த விருப்பம் அமானுஷ்ய விஷயங்களை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories