சூரியன், செவ்வாய், சுக்கிரன்: தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். சூரியன் 17ஆம் தேதிக்குப் பிறகு 11வது வீட்டிற்கு மாறுகிறார்.
குரு: குரு பகவான் ஆறாவது வீடான நோய், கடன்கள், எதிரி ஆகியோரை குறிக்கும் வீட்டில் சஞ்சரிப்பார்.
சனி: இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் இருப்பார்.
புதன்: ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
பொதுவான பலன்கள்:
மாதத்தின் முதல் பாதியில் சூரியன் பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலை தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். ராகுவின் நிலை காரணமாக உடல் நிலையில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். குருவின் நிலை காரணமாக நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை:
மாதத்தின் முதல் பாதியில் வருமானம் அதிகரிக்கும். சூரியன் 17ஆம் தேதிக்கு பிறகு லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சிவதால் பொருளாதாரம் உயரும். வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது குறிக்கிறது. நிதி சார்ந்த பெரிய விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
பணியிடத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை மாறுதல் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். மாதத்தின் ஆரம்பத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சூரியன் 11 ஆம் வீட்டிற்கு மாறிய பிறகு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய யோசனைகள் உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை திறக்கும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ராகு மற்றும் குரு பகவானின் நிலை காரணமாக உடல் நலத்தில் அதிக கவனத்துடன் செயல்படவும். சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி அவசியம்.
மாணவர்களுக்கு கடின உழைப்பு நிறைந்த காலமாக இருக்கும். ஆனால் உழைப்பு வீண் போகாது. தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். உயர்கல்வி விரும்பும் படிக்க விரும்புபவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.
குடும்ப உறவுகள்:
கேதுவின் நிலை காரணமாக திருமண உறவுகளில் பதற்றம் அதிகரிக்கும். பரஸ்பர முரண்பாடுகள் எழலாம். எனவே கவனமாக செயல்பட வேண்டும். மாதத்தின் பிற்பகுதியில் சில பிரச்சனைகள் எழக்கூடும். சூரியனின் பெயர்ச்சிக்குப் பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகளை நீக்கி உறவுகளை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள்.
பரிகாரங்கள்:
புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது மிகுந்த நன்மை தரும். ஆஞ்சநேயர் அல்லது சிவபெருமானை வணங்குவது தைரியத்தையும், ஆற்றலையும் அதிகரிக்கும். இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)