Astrology: புத்தாண்டில் கை கோர்க்கும் சுப கிரகங்கள்.! தை மாதம் முதல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!

Published : Dec 10, 2025, 01:16 PM IST

Thai Month Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைவதை தொடர்ந்து, சுக்கிர பகவானும் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
சூரியன் சுக்கிரன் சேர்க்கை 2026

ஜோதிடத்தின்படி சூரிய பகவான் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 அவர் மகர ராசிக்குள் நுழையும் பொழுது தை மாதம் பிறக்கிறது. இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வருடம் சுக்கிரனும், சூரிய பகவானுடன் இணைந்து மகர ராசியில் பயணிக்க இருக்கிறார். மகர ராசி சனி பகவானுக்கு சொந்த ராசி என்பதால் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

25
1.மகரம்

மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. தைரியம், வீரம், தலைமைப் பண்பு, கௌரவம், அரசாங்கம், அதிகாரம் ஆகியவற்றின் காரகரான சூரிய பகவான் மகர ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வாரி வழங்க இருக்கிறார். ஆளுமைத் திறன், ஆரோக்கியம், தன்னம்பிக்கை மேம்படும். உடல் சக்தி அதிகரிக்கும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகளைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். நிதி நிலைமை மேம்படும். புதிய உறவுகளில் ஆர்வம் கூடும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள்.

35
2.மேஷம்

மேஷ ராசியின் பத்தாவது வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைவு நடைபெற இருக்கிறது. பத்தாவது வீடு தொழில் அல்லது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உத்தியோகம் மற்றும் தொழிலில் புதிய இலக்குகளை அடைவீர்கள். சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். தனியார் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அரசு பணிகள் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் வேலைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய அதிகார பதவிகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

45
3.ரிஷபம்

ரிஷப ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு நடைபெற இருக்கிறது. இந்த வீடு அதிர்ஷ்டம், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை குறிக்கிறது. எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு வேலை அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த சிக்கல்கள் தீரும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய மற்றும் பயனுள்ள உறவுகள் இந்த காலகட்டத்தில் உருவாகும். குடும்பத்தில் இருந்த தகராறுகள், பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதி கிடைக்கும்.

55
4.மீனம்

மீன ராசிக்கு சூரியன் சுக்கிரன் இணைவு 11-வது வீட்டில் நடைபெற இருக்கிறது. இந்த வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது வருமானங்கள், ஆசைகள், லாபங்கள் மற்றும் மூத்த சகோதரர்களை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிலவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன்களை அடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். நண்பர்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய நபர்களின் செல்வாக்கு காரணமாக ஆதாயங்கள் கிடைக்கும். எதிர்கால இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories