Sun Shukra Conjunction in Scorpio: விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் விரைவில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளும், அவற்றின் இயக்கங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் இணையும் பொழுது ராஜயோகங்களும் உருவாகி மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை தருகின்றன. அந்த வகையில் நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் நவம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.
ஆற்றல், தலைமைப் பண்பு, கௌரவம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரகராக விளங்கும் சூரியனும், செல்வம், செழிப்பு, இன்பம், பொருள் ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்கும் சுக்கிரனும் இணைவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீடான லாப ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தச் சேர்க்கை உங்களது சொந்த ராசியில் நிகழ்வதால், இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான காலமாகும்.
உங்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
திடீர் பண வரவுகள், முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், உயர்வும் கிடைக்கலாம்.
திருமணம் மற்றும் தொழில் கூட்டாண்மை உறவுகளில் முக்கியத்துவம் இருக்கும்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சி, புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், கூட்டாளிகள் சேரலாம்.
35
மகரம்
சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
இந்த சேர்க்கை உங்கள் ஜாதகத்தின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாக இருக்கிறது.
இதன் காரணமாக உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காண்பீர்கள்.
புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
அதிர்ஷ்டத்தின் காற்று உங்கள் பக்கம் வீசும். இதன் காரணமாக நிதி நிலைமை மேம்படும்.
முதலீடுகள் அல்லது சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயங்கள் ஏற்படும்.
பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சரியாகி, சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சாதகமாக அமையும்.
இந்த இணைப்பு உங்கள் ஜாதகத்தின் பணம் மற்றும் பேச்சு வீட்டில் உருவாகிறது. எனவே இந்த காலக் கட்டத்தில் நீங்கள் திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம்.
நிதி ஆதாயங்கள் உருவாகும். வேலை மற்றும் வணிகத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
நம்பிக்கை மற்றும் தைரியம் உயரும். சவாலான வேலையை எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
பெரிய வேலைகள், திட்டங்கள், ஆர்டர்கள் உங்கள் கைக்கு வரலாம்.
புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
உங்கள் ஆளுமை பிரகாசிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
55
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது நன்மை பயக்கும்.
இந்த இணைவு உங்கள் ராசியின் கர்ம ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது.
எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். உங்கள் தொழிலை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்துவீர்கள்.
உங்கள் மனதில் புதிய நம்பிக்கைகளும், வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
வேலை மாற்றம் விரும்புவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
வருமானம் அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)