சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: நெருப்பு ராசியில் சூரியன், புதனோடு இணையும் காதல் நாயகன்.. உஷார்!

First Published | Jul 27, 2024, 11:20 AM IST

காதல்  கிரகமான சுக்கிரன் நெருப்பு ராசியான சிம்மத்தில் புதனோடு கூட்டணி சேரப்போகிறார். ஜூலை 31ஆம் தேதி சுக்கிரப்பெயர்ச்சி நிகழ்கிறது. ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வரை சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பார். புதன், சுக்கிரனோடு ஆட்சி பெற்ற சூரியனும் இணைவதால்  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் தரும் யோகங்கள்

சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.   சுக்கிரன் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளிடம் இருந்த தடைகள் நீங்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளதார நிலை உயரும்.  திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. காதல் மணியடிக்கும் கல்யாணம் கைகூடி வரும்.

Tap to resize

ரிஷபம்

உங்கள் ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் திக் பலம் பெறுவதால் தடைபட்ட காரியம் எல்லாம் தடைகள் நீங்கி மளமளவென முடிவுக்கு வரும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.  வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.

கடகம்

சுக்கிரன்  உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள்.

சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் புதனோடு குடியேறப்போகிறார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.   சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் அரசனுக்கு இணையான வாழ்க்கை வரப்போகிறது. திடீர் அதிர்ஷ்டம் வந்து திக்குமுக்காட வைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள்.  மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும்.  வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 

தனுசு

உங்கள்ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில்  சுக்கிரன் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். அப்பாவழியில் உதவி கிடைக்கும்.
 

மகரம்

சுக்கிரன்  எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைகிறார்.  புதன் ஏற்கனவே அங்கே குடியிருக்கிறார் கூடவே சுக்கிரன் இணைவதால்   பொருள், நகை  விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும்.  இருவருமே கவனமாக இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.
 

Latest Videos

click me!