New year Rasi Palan 2025: ராகு சனி கூட்டணி; குருவை பார்க்கும் சனி - எந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை?

Published : Jul 22, 2024, 12:13 PM ISTUpdated : Jul 22, 2024, 01:59 PM IST

2025ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டில் நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. ஆண்டு கோள்களான சனி, ராகு கேது, குரு பெயர்ச்சி உலக மக்களுக்கு பலவித சாதக பாதகங்களை தரப்போகிறது. சனியின் சஞ்சாரம் பார்வைகள், குருவின் சஞ்சாரம் பார்வைகள் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

PREV
17
New year Rasi Palan 2025: ராகு சனி கூட்டணி; குருவை பார்க்கும் சனி - எந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை?
சனியின் பார்வையில் குரு, கேது

மீன ராசியில் தனித்து பயணம் செய்யும் ராகு உடன் 2025ஆம் ஆண்டு சனி இணையப் போகிறார். அதே நேரத்தில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகும் சனி பகவான் ரிஷப ராசியில் உள்ள குருவை பார்க்கப் போகிறார். கன்னி ராசியில் உள்ள கேதுவின் மீது சனியின் பார்வை விழப்போகிறது.

27
குரு + சனி கூட்டணி

குரு சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாக திகழ்வார்கள். சனி கேது சேர்க்கை பார்வை ஆன்மீக ரீதியாக பலவித வளர்ச்சிகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சனி ராகு சேர்க்கை பெற்றவர்கள். சனி கேது பார்வை பெற்றவர்கள், குரு சனி பார்வை பெற்றவர்கள் எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்வார்கள். மடங்கள், கோயில்களில் தர்மகர்த்தா, பொக்கிஷத்தை பாதுகாக்கும் அதிகாரி, இந்து அறநிலையத்துறை அதிகாரி போன்ற பதவியில் அமர்வார்கள்.  
 

37
மேஷம்

உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்வது சிறப்பு.  "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்பதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு வரை மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும்.  கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலைவாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதிப்பீர்கள். 2025ஆம் ஆண்டில் உங்களுக்க  கோடீஸ்வர யோகமும் குபேர யோகமும் தேடி வரப்போகிறது காரணம் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு அத்தனையும் அள்ளித்தரப்போகிறார். ஏற்கனவே லாப சனி கொடுத்த கோடீஸ்வர யோகத்தை லாப ராகு வந்து தக்க வைப்பார். 2027ஆம் ஆண்டு வரைக்கும் மேஷ ராசிக்காரர்களை அசைக்க முடியாது. கொடுக்கிற ராகு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார்.

47
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு லாப குரு நிறைய பொருளாதார வளத்தை கொடுத்து வருகிறார். 2025ஆம் ஆண்டு  மே மாதம் வரைக்கும்  ராகு கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியங்கள் துலங்கும் உங்களின் எண்ணங்கள் நிறைவேற குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்க ராசிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார்.  வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. மனதில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த நோய்கள் குணமடையும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் வரப்போகிறது. 2025ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு அஷ்டம சனி விலகி பாக்ய சனியாக மாறப்போகிறார். உங்களை பாடாய் படுத்தி வந்த நோய்கள் நீங்கப்போகிறது. அதே நேரத்தில் 8ஆம் வீட்டிற்கு ராகு இடப்பெயர்ச்சி அடைவதால்  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விரைய குரு நிறைய பண விரையத்தை தரப்போகிறார். குடும்ப கேதுவினால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விசயங்களில் கவனம் தேவை

57
சிம்மம்

2025 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர்.  2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் பணவரவு அற்புதமாக இருக்கும். காரணம் ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கழுத்தை நெரித்து வந்த கடன்கள் அடைபடும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வரப்போவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அதே நேரத்தில் அஷ்டம சனியாக 8ஆம் வீட்டில் அமர்ந்து சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
 

67
துலாம்

உங்களுடைய ராசிக்கு 6ஆம் வீடான எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பயணம் செய்வதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் நீங்கும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வருமானம் அதிகரிக்கும். காரணம் கேது லாப ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவது கூடுதல் சிறப்பு. அஷ்டம குருவினால் கஷ்டங்களை அனுபவித்த துலாம் ராசிக்காரர்கள் பாக்ய ஸ்தான குரு, மற்றும் லாப கேதுவினால்  மன நிம்மதி, மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகிறீர்கள்.

77
மகரம்

 

ராகு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்தில் மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் தடைகள் நீங்கி சுபமாக நடைபெறும். 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். குரு பகவான் பார்வை 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை கிடைப்பதால் திருமண சுப காரியம் கைகூடும்.  மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நோய்கள் வெளிப்பட்டு குணமடையும். கடந்த ஏழரை ஆண்டு காலமாக சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகப்போகிறது. ஏழரை சனி முடிவுக்கு வரப்போவதால் 2025ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மகர ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories