Guru Peyarchi Palan 2024 Tamil: பொன்னவன் குரு தரப்போகும் பொற்காலம்; யாருக்கு பண மழை பொழியும்?

First Published | Jul 24, 2024, 12:31 PM IST

குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருபகவான் இன்னும் சில மாதங்களில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. திருமணம், சுபகாரியம் யாருக்கு நடைபெறும், பொற்காலம் யாருக்கு என்று பார்க்கலாம்.

மேஷம்

குருபகவான் உங்கள் ராசிக்கு  குடும்பம், தனம் ,  வாக்கு ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போவதால் வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில்  செலவுகள் கூடும்  குருவின்  பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது விழுவதால் சூரியனை கண்ட பனிபோல பிரச்சினைகள் மறைந்து விடும்.
குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். செல்வமும் செல்வாக்கும் உயரப்போகிறது. வெளிநாடு செல்வதற்கான யோகம் வரப்போகிறது. தொழில் ஸ்தானத்தை பார்க்கும் குரு பகவான் கை நிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுப்பார். நோய்கள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். நீண்ட காலமாக இழுத்தடித்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு பால் வாங்கி தரவும்.

ரிஷபம்

‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்று பாடல் உள்ளது. ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் ரிஷப  ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து பயணம் செய்வதால் புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும்.  குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9, ஆகிய வீடுகளின் மீது விழுகிறது.  பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்ப்பதால் உயர் பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் கனவுகள் நனவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கோடி கோடியாக பணமழை பொழியப்போகிறது காரணம் பாக்ய ஸ்தானத்தின் மீது குரு பார்வை வி

Tap to resize

மிதுனம்

சுப கிரகமான குருபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராஜயோக காலம்தான். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை குரு பார்வையிடுவதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.  வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் நோய்கள் நீங்கும் வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும்.  வேலையில் மாற்றம் முன்னேற்றம் வரும். இது வரை இருந்த நோய்கள் நீங்கப்போகிறது.   உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம் கூடி வரப்போகிறது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது

கடகம்

குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் உச்சம் பெறுபவர் குரு பகவான். முழுமையாக சுபரான குரு பகவான் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுவதால் உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற ஐந்தாம் வீட்டினை குரு பார்வையிடுவதால்  உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் நனவாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் திருமண சுபகாரியம் நடைபெறும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மாதம் ஒருமுறை பௌர்ணமி நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

Latest Videos

click me!