Astrology: அக்.9 நடக்கும் சுக்கிர பெயர்ச்சி.! சுக்கிர திசையால் கோடிகளை வாரி சுருட்டப் போகும் 3 ராசிக்காரர்கள்.!

Published : Oct 09, 2025, 12:17 PM IST

Sukra peyarchi 2025: அக்டோபர் 9, 2025 சுக்கிர பகவான் தனது ராசியை மாற்ற இருக்கிறார். சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியானது, சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
சுக்கிர பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக இருக்கிறார். இவரின் பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் 12 மாதங்களுக்குப் பிறகு அவர் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசியில் ஏற்கனவே சூரிய பகவான் இருப்பதால் அவருடன் இணைந்து நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

25
நீச் பங்க் ராஜயோகம் 2025

நீச் பங்க் ராஜயோகம் என்பது பலவீனமான ராசியில் உள்ள ஒரு கிரகம், நல்ல கிரகத்துடன் இணையும் பொழுது உருவாகும் யோகமாகும். கன்னி ராசியானது புதன் பகவான் ஆளும் ராசியாகும். இது சுக்கிர பகவானுக்கு பலவீனமான ராசியாக கருதப்படுகிறது. இருப்பினும் சூரிய பகவான் கன்னி ராசியில் இருப்பதன் காரணமாக நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
கன்னி
  • கன்னி ராசியின் லக்ன வீட்டில் ‘நீச் பங்க் ராஜயோகம்’ உருவாகிறது. 
  • இது கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. 
  • இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றியை ஈட்டுவீர்கள். 
  • குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும். 
  • திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுபவர்களுக்கு சுபமான செய்திகள் வந்து சேரலாம். 
  • வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சுப செய்திகளைப் பெறுவீர்கள். 
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். 
  • வணிகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • தொழில் செய்து வருபவர்கள் மிகப்பெரிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். 
  • ஒட்டுமொத்தமாக அடுத்த சில நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
45
தனுசு
  • தனுசு ராசியின் 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் நீச் பங்க் ராஜயோகம் உருவாகிறது. 
  • இதன் காரணமாக உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். 
  • வேலையில் உள்ள நபர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். 
  • புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். 
  • பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. 
  • கலை, எழுத்து, இசை அல்லது வேறு எந்த படைப்புத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். 
  • பணியிடத்தில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றல் பாராட்டப்படும். 
  • அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் செல்வாக்கு உயிரும். 
  • வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
55
கும்பம்
  • கும்ப ராசியின் எட்டாவது வீட்டில் ‘நீச் பங்க் ராஜயோகம்’ உருவாகிறது. 
  • எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் நேர்மையான பலன்களை அனுபவிப்பீர்கள். 
  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். பொன், பொருள், வசதிகள் ஆடம்பரங்களை அனுபவிப்பீர்கள். 
  • திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 
  • உறவுகளுக்கிடையே நீண்ட காலமாக இருந்த மோதல்கள் முடிவுக்கு வரும். வீட்டில் அமைதி ஏற்படும். 
  • சுக்கிரன் அதிர்ஷ்டத்தின் அதிபதியாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் காற்று முழுமையாக வீசும். 
  • அனைத்து திசைகளில் இருந்தும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 
  • பூர்வீக சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories