Astrology: கடகத்தில் உச்சம் பெறும் குரு.! 100 ஆண்டுகளுக்குப் பின் தீபாவளியில் உருவாகும் இரு ராஜயோகங்கள்.! அதிர்ஷ்ட மழையில் 3 ராசிகள்.!

Published : Oct 09, 2025, 10:48 AM IST

Hans - Kendra trikona rajyog: தீபாவளியின் போது குரு பகவான் ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோணம் என்கிற இரண்டு ராஜயோகங்களை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
குரு உருவாக்கும் இரு ராஜயோகங்கள்

வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகங்கள் உருவாக உள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் இந்த ராஜயோகங்கள் உருவாவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.

24
கடகம்

2025 ஆம் ஆண்டு தீபாவளி அன்று குரு பகவான் கடக ராசியில் உச்ச நிலையில் இருப்பார். இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அடைய உள்ளனர். குரு முதல் ஸ்தானத்தில் லக்னத்தில் உச்சம் பெறுவதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. இது தன்னம்பிக்கை, ஆன்மீக வளர்ச்சி, தலைமைப் பண்புகளை வலுப்படுத்தும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உறவுகளில் நல்லிணக்கம், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்து, தியானம் மற்றும் புனித தலங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

34
துலாம்

தீபாவளி தினத்தில் குரு பகவான் துலாம் ராசியில் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இது தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு, சமூக மரியாதை ஆகியவற்றை வழங்கும். வேலைவாய்ப்பில் மகத்தான வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகத்தில் விரிவாக்கம், புதிய முதலீடுகளுக்கு சாதகமான காலமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் அதிகரிக்கும். புதிய திறன்களை கற்று தொழிலில் புதிய வளர்ச்சியை அடைவீர்கள்.

44
விருச்சிகம்

விருச்சிக ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம், செல்வம், ஆன்மீக பயணங்கள் ஏற்படும் சூழல் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது உயர் கல்விக்கான வாய்ப்புகள் தோன்றும். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உறவுகளில் நல்லிணக்கமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories