
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சில ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகுந்த புத்திசாலித்தனத்துடன் விளங்குகின்றனர். அவர்கள் அசைக்க முடியாத நேர்மை மற்றும் சுயமரியாதை மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களை ஏமாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஜோதிடத்தில் சில ராசிகளில் பிறந்த பெண்களை ஏமாற்றுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் குறித்தும் அத்தகைய ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசியைச் சேர்ந்த பெண்கள் பிடிவாத குணம் மற்றும் ஆழ்ந்த விசுவாசம் கொண்டவர்கள். இவர்கள் சுக்கிரன் ஆட்சியின் கீழ் இருப்பதால் ஆழமான, அர்த்தமுள்ள உறவுகளை விரும்புவார்கள். ராசிகளிலேயே மிகவும் நம்பகமான மற்றும் உறுதியான ராசி ரிஷபம். ஒருமுறை ஒரு உறவுக்குள் நுழைந்து விட்டால் தங்கள் முடிவை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் உறவுகளிலும், நட்புகளிலும் மிக விசுவாசமாக இருப்பார்கள். தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க எதையும் செய்வார்கள். துரோகம் செய்வது பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். தாங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருப்பார்கள். இவர்களின் இந்த பிடிவாத குணம் இவர்களை ஏமாறுவதில் இருந்து காப்பாற்றுகிறது.
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தை அல்லது ஒரு மனிதரின் ஆழ்மனது வரை ஊடுருவிச் சென்று பார்க்கும் தன்மை உடையவர்கள். ஒருவரின் வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையான எண்ணங்களை எளிதில் கண்டறிந்து விடுவார்கள். யாரேனும் பொய் சொல்ல முயற்சித்தால் அதை ஒரு நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.
இவர்கள் ரகசியமாக திட்டமிடுபவர்கள். வெளிப்படையாக சிரித்தாலும் உள்ளுக்குள் நிலைமையை கவனமாக எடை போட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினம். இவர்களின் நம்பிக்கையை யாராவது மீறினால் அவர்களை மறக்கவே மாட்டார்கள். இவர்களுக்கு செய்யும் துரோகத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களை ஏமாற்ற துணிந்தவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மகர ராசியைச் சேர்ந்த பெண்கள் கடின உழைப்பாளிகள். உயர்ந்த லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் நடைமுறை சிந்தனை கொண்டவர்கள். உறவுகளில் இவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், பொறுப்பும் அசைக்க முடியாதது மற்றும. சந்தேகத்திற்கு இடமில்லாதது. விளையாட்டான அல்லது போலியான உறவுகளுக்கு இவர்களிடம் இடமில்லை. ஒரு பிரச்சனையில் பின்னடவு ஏற்பட்டால் புத்திசாலித்தனமாக கையாளுவார்கள்.
இவர்களின் உழைப்பை யாரும் விமர்சித்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் லட்சியமும் குறிக்கோளும் மிகத் தெளிவாக இருக்கும். அதை நோக்கியே இவர்கள் பயணிப்பார்கள். இவர்களை திசை திருப்புவது அல்லது ஏமாற்றுவது என்பது மிகவும் சவாலானது.
கும்ப ராசியைச் சேர்ந்த பெண்கள் உயர்ந்த சிந்தனை, மனிதாபிமானம் மற்றும் தீவிரமான நேர்மை குணம் கொண்டவர்கள். சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், நேர்மையானவர்கள். ஒருபோதும் தங்கள் துணையின் நம்பிக்கையை உடைக்க மாட்டார்கள். தங்கள் துணையின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே அறிந்து செயல்படும் திறன் கொண்டவர்கள்.
கடினமான நேரங்களில் இவர்கள் வினோதமான ஆளுமையுடன் புதிய கோணங்களில் சிந்திப்பார்கள். இவர்கள் அனைவரும் செல்லும் பாதையில் செல்லாமல் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கி செல்வார்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பவர்களின் எந்த தந்திரமும் இவர்களின் புதிய சிந்தனைக்கு முன்னர் நிற்காது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)