Shul Yog 2026: 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆபத்தான சூல யோகம்.! இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப உஷாரா இருக்கணும்.!

Published : May 27, 2026, 05:22 PM IST

Shul Yoga 2026 Unlucky Zodiac Signs: ஜோதிடத்தில் சூல யோகம் ஒரு அசுப யோகமாக பார்க்கப்படுது. ஜூன் 2026-ல் உருவாகும், இந்த யோகத்தால் எந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

PREV
17
Shul Yoga 2026 Unlucky Zodiac Signs

ஜூன் 14, 2026 மதியம் 1:15 மணிக்கு சூல யோகம் உருவாகிறது. இது அடுத்த நாள், அதாவது ஜூன் 15, 2026 காலை 8:56 மணி வரை நீடிக்கும். இந்த யோகம் உடனடியாக முடிந்தாலும், இதன் அசுப விளைவுகள் சில நாட்களுக்கு தொடரும். ஜூன் 14-க்கு பிறகு எந்தெந்த 5 ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!

27
மிதுனம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அசுப யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சில விரும்பத்தகாத செய்திகள் காதுக்கு வரலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலை மோசமடையலாம். பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதவிர, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் வரலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடால் பிரிவை சந்திக்க நேரிடும்.

Monthly Horoscope: ஜூன் மாதம் உருவாகும் 4 ராஜயோகங்கள்.! வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!

37
கன்னி

வேலை செய்யும் இடத்தில், உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்காமல் போகலாம். அவசரத்தில் சில தவறுகளைச் செய்து, பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் கால் வலியாலும் அவதிப்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களே உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். தேவையற்ற மன உளைச்சலும், கோபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Mercury Transit 2026: புதன் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு சிக்கல்.! அடிமேல் அடி விழப்போகுது.! பரிகாரங்கள் என்ன?

47
தனுசு

திருமணமாகாதவர்கள் இந்த நேரத்தில் புதிய உறவைத் தொடங்குவது நல்லதல்ல. மேலும், ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக நிறைய அலைய வேண்டியிருக்கும். பண ரீதியான கஷ்டங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடும். பண பரிவத்தனைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

57
மகரம்

வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலையைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள், அலட்சியம் வேண்டாம். அவசரப்பட்டு எந்த சொத்து ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள். குடும்ப விஷயங்களும் சுமாராகவே இருக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

67
கும்பம்

நீங்கள் நினைத்தது எதுவும் நடக்காததால், மன வருத்தத்தில் இருப்பீர்கள். அவசரத்தில் பெரிய தவறு செய்யவும் வாய்ப்புள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல்நிலை மோசமடையலாம். எடுக்கும் காரியங்களில் தடங்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிருங்கள்.

77
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories