Astrology: புத்தாண்டில் மகரத்தில் உதிக்கும் சுக்கிர பகவான்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!

Published : Nov 20, 2025, 12:12 PM IST

Shukra Gochar 2026: 2026 ஆண்டு தொடங்க உள்ள நிலையில், சுக்கிர பகவான் மகர ராசியில் உதயமாகி மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செழிப்பையும், செல்வத்தையும் கொண்டு வர இருக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
மகர ராசியில் சுக்கிரன் உதயம் 2025

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் அன்பு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவரின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் என்பது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. 

அந்த வகையில் அஸ்தமனமான நிலையில் பயணித்து வரும் அவர் 2026 ஆம் ஆண்டில் மகர ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம், வருமானத்தில் உயர்வு, நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்பட உள்ளன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மகரம்

சுக்கிரன் உங்கள் ராசியிலேயே (லக்னத்திலேயே) உதயமாகிறார். மகர ராசியின் முதல் வீட்டில் சுக்கிரனின் உதயம் நடப்பதால் மகர ராசிக்காரர்கள் மிகப்பெரிய அளவில் நன்மைகளை அனுபவிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை பலமடைந்து மற்றவர்களை கவர்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குதல், வாகனம் வாங்குதல், வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்தல் போன்ற வாய்ப்புகள் உண்டாகும். பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்ற பணிகள் மீண்டும் வேகமெடுக்கும். திருமண உறவில் மகிழ்ச்சி, இன்பம், அமைதி அதிகரிக்கும். வாழ்க்கையில் செழிப்பை அனுபவிப்பீர்கள்.

35
ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியாக விளங்கி வரும் சுக்கிர பகவான் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் உதயம் ஆகிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மூலமாக நன்மைகள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களின் கனவு நினைவாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இது சிறந்த காலகட்டம். வெளிநாட்டிற்கு படிப்பு அல்லது வேலைக்காக செல்ல நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். தொழில் மூலம் சமூகத்தில் நற்பெயரையும், அந்தஸ்தையும் பெறுவீர்கள். புதிதாக தொடங்கும் ஒவ்வொரு திட்டங்களிலும் வெற்றி கிடைக்கும்.

45
துலாம்

துலாம் ராசிக்கும் சுக்கிர பகவானே அதிபதியாவார். மகரத்தில் சுக்கிரனின் உதயம் துலாம் ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் உங்களின் வீடு வாகனம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும். வீட்டை புதுப்பித்தல் அல்லது புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு இது சாதகமான நேரமாகும். தாய் வழி உறவினர்களுடன் உறவு வலுப்பெறும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி கூடும். பணிச்சுமை குறைந்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

55
மீனம்

மகர ராசியில் சுக்கிரன் உதயமாவது மீன ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் நடக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பாராத பண வரவுகளுக்கு வாய்ப்பு உண்டு. உங்களின் சமூக வட்டம் விரிவடையும். நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் வழி ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் மற்றும் இலக்குகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான காலகட்டம் ஆகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories