November 20 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 20, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியை காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 1, 9.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மெரூன்.
ரிஷபம்:
இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். வியாபாரம் அல்லது தொழிலில் சிறிய சவால்கள் ஏற்படலாம். இருப்பினும் அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாகும்.
அதிர்ஷ்ட எண்: 5, 6.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.
மிதுனம்:
இன்றைய தினம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்களுடைய யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3, 5.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை, மஞ்சள்.
கடகம்:
இன்று உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்: 2, 7.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், சில்வர்.
சிம்மம்:
இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். தலைமைப் பண்புகள் வெளிப்படும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த முதலீடுகள் குறித்து சிந்திக்க ஏற்ற நாள். இன்று துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியைக் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1, 9.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, தங்க நிறம்.
கன்னி:
முக்கிய முடிவுகளை எடுப்பதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். யோகம், தியானம் செய்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 5, 8.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்.
துலாம்:
இன்றைய தினம் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். சமூகத்தில் மதிப்பு கூடும். நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து வெற்றியைக் காண்பீர்கள். புதிய உறவுகள் மலர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6, 7.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், இளஞ்சிவப்பு.
விருச்சிகம்:
இன்று ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேலையிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் விலகுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 1, 9.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு, காக்கி.
தனுசு:
இன்று அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் தேடி வரும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்ற நாள். ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்
அதிர்ஷ்ட எண்: 3, 6.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா.
மகரம்:
இன்று தொழில் மற்றும் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். உங்கள் திட்டங்கள் அனைத்தும் கைகூடும். முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். பொறுமையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்ட எண்: 4, 8.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, கருப்பு.
கும்பம்:
இன்று புதிய சிந்தனைகள் உதயமாகும். உங்களின் யோசனைகள் அலுவலகத்தில் பாராட்டப்படும். சகோதரர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். நிதி வரவு சீராக இருக்கும். பணியிடத்தில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கி, புது உற்சாகத்துடன் நாளை தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4, 8.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, இண்டிகோ.
மீனம்:
இன்று உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீண்ட கால பலன்களைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3, 7.
அதிர்ஷ்ட நிறம்: மெஜந்தா, கடல் பச்சை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)