Thulam Rasi Palan Nov 20: துலாம் ராசி நேயர்களே, சந்திரனின் அருளால் இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.!

Published : Nov 19, 2025, 04:07 PM IST

Nov 20 Thulam Rasi Palan : நவம்பர் 20, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
நவம்பர் 20, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் சந்திர பகவானின் நிலை காரணமாக உத்தியோகம் மற்றும் தொழிலில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். 

பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

நிதி நிலைமை:

சூரியனின் நிலை காரணமாக நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழிலுக்காக அல்லது தாயாரின் உடல் ஆரோக்கியத்திற்காக எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பட்ஜெட் படி செலவு செய்யுங்கள். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் பெரியவர்கள் அல்லது நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்

தனிப்பட்ட வாழ்க்கை:

சனி பகவானின் நிலை காரணமாக குடும்ப உறவுகளில் சில சலசலப்புகள் வந்து போகும். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகோதரர்கள் அல்லது சகோதரிகள் வழியாக நன்மைகள் கிடைக்கக்கூடும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரங்கள்:

இன்று நரசிம்மரை வழிபடுவது நல்லது. மகாலட்சுமி தாயார் அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது பலன்களை அதிகரிக்கும். முடிந்தவர்கள் கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு மதிய வேளைக்கான உணவு கொடுத்து அன்னதானம் செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories