Astrology: செவ்வாய் சுக்கிரன் நடத்தும் அதிசயம்.! த்வி துவாதச யோகத்தால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.!

Published : Nov 10, 2025, 12:57 PM IST

Dwi dwadash rajyog 2025: துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரன் செவ்வாய் பகவானுடன் இணைந்து அரிய த்வி துவாதச ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
த்வி துவாதச ராஜயோகம் 2025

அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிர பகவான் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் நவம்பர் 10 காலை 9:46 மணிக்கு செவ்வாய் பகவானுடன் 30 டிகிரி இடைவெளியில் சந்திக்கிறார். இந்த சிறப்பு சேர்க்கை த்வி துவாதச யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு த்வி துவாதச யோகம் மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவானும், ஏழாவது வீட்டில் சுக்கிர பகவானும் அமர்ந்துள்ளனர். செல்வ வீட்டில் செவ்வாயின் பார்வை இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி வரவைப் பெறுவீர்கள். 

சொத்துக்கள் தொடர்பான தகராறுகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் புதிய வேலை அல்லது வெளிநாட்டில் பணி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். 

அதிக பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

35
ரிஷபம்

சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்து உருவாக்கும் த்வி துவாதச யோகம் ரிஷப ராசியின் ஏழாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. ஏழாவது வீடு திருமண உறவுகள், தொழில் கூட்டாளிகள், கூட்டாண்மைகள் குறித்த வீடாகும். 

எனவே இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். திருமண வாழ்க்கையில் இனிமை மற்றும் புரிதல் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும். வணிக கூட்டாண்மைகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தும். 

தனிமையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12-வது வீட்டில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து த்வி துவாதச ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த வீடு வெளிநாடு, ஆன்மீகம் மற்றும் மறைக்கப்பட்ட விஷயங்களை குறிக்கின்றன. 

எனவே இந்த இணைப்பு உங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை தரக்கூடும். வெளிநாட்டு பயணம் அல்லது வெளிநாட்டு மூலங்கள் இருந்து நிதி ஆதாயங்கள் உண்டாகும். கலை, வடிவமைப்பு அல்லது ஊடகங்களில் ஈடுபடுபவர்கள் புகழையும், புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். 

பழைய பிரச்சனைகள் அல்லது மன அழுத்தங்கள் குறைந்து மன நிம்மதி கிடைக்கும். புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமான நேரமாகும். குடும்பத்திலும் அளவில்லாத மகிழ்ச்சி நிலவும்.

55
தனுசு

சுக்கிரன் செவ்வாய் இணைப்பானது தனுசு ராசியின் 11-வது வீட்டை பாதிக்கிறது. 11-வது வீடு என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. 

எனவே தனுசு ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் பல வழிகளில் லாபத்தைப் பெறுவீர்கள். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் உள்ளது. திடீர் நிதி ஆதாயம் கிடைக்கலாம். பல வழிகளில் சிக்கிய பணத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும். வருமானத்தை பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். 

உயர் பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் அல்லது செல்வாக்கு மிக்க நபர்களின் உதவி மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories