Shani Revati Nakshatra Transit: மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூலை 2 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைய இருக்கிறார். அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்பதால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் ஜூலை 2 காலை 8:22 மணியளவில் அவர் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் அவர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பயணிக்கிறார். இதன் காரணமாக எந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும் என இங்கு காணலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியானது மிகச்சிறந்த பொற்காலமாக அமையும். வேலையில் மிகப்பெரிய அளவில் பதவி உயர்வு, சம்பள உயர்வை பெற இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்று உங்கள் கைகளுக்கு கிடைக்கும். அரசு வேலைக்காக தயாராகி வரும் மாணவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். சண்டை சச்சரவுகள் அகலும்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் முழுமையான அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வருமானம் கிடைப்பதற்கான வழிகளைப் பெறுவீர்கள். உங்கள் வேலையில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். உங்கள் திறமையால் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். குழந்தைகளின் உயர் கல்விக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியானது அனைத்து துறைகளிலும் வெற்றியை வாரி வழங்க இருக்கிறது. உங்களின் கடின உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்ய இருக்கிறீர்கள். உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து பிறர் பொறாமைப்படும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கி, உடல் நலம் மேம்படும். வாழ்க்கை துணையிடம் நல்ல புரிதல் உண்டாகும். வெற்றிப் பாதையில் பயணித்து உங்கள் வாழ்க்கையை முன்னேற்றிச் செல்வீர்கள்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.