உங்கள் பிறந்த தேதியின் ஒற்றை இலக்க எண் தான் (Radical Number) உங்கள் முதன்மை எண். அதற்குப் பொருத்தமான மொபைல் மற்றும் வண்டி எண்களைக் கீழே உள்ள பட்டியலைப் பார்த்துக் தெரிந்துகொள்ளுங்கள்.
1, 2, 3 இல் பிறந்தவர்கள் (தேதிகள்: 1, 10, 19, 28 / 2, 11, 20, 29 / 3, 12, 21, 30)
- மொபைல் எண்: உங்களுக்கு 1, 2, 3, 5, 9 ஆகிய கூட்டு எண்களில் மொபைல் எண் அமைந்தால் அரசுத் தொடர்பு, பதவி உயர்வு, மற்றும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். முக்கியமாக, உங்கள் மொபைல் எண் கூட்டுத்தொகை 5 ஆக இருந்தால், அது உங்களைத் தேடிப் பெரும் பண வரவை இழுத்து வரும்; உங்களை ஒரு மில்லியனராக (Millionaire) மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.
- வண்டி எண்: 1, 3, 5 எண்கள் மிகச் சிறப்பு. வண்டி அடிக்கடி பழுதாவதைத் தடுக்கும்.
- தவிர்க்க வேண்டிய எண்: 8 (சனி) கூட்டு எண்ணைத் தவிர்க்கவும்.
4, 5, 6 இல் பிறந்தவர்கள் (தேதிகள்: 4, 13, 22, 31 / 5, 14, 23 / 6, 15, 24)
- மொபைல் எண்: உங்களுக்கு 1, 5, 6 ஆகிய எண்கள் வியாபாரத்தில் அசாத்திய லாபத்தையும், புதிய வாடிக்கையாளர்களையும் தேடித்தரும். குறிப்பாக, 5 மற்றும் 6 ஆகிய எண்கள் 'குபேர யோகத்தை' தரக்கூடியவை. இந்த எண்களைப் பயன்படுத்தும் போது, உங்கள் பிசினஸ் பல மடங்கு உயர்ந்து, கோடிகளில் சொத்து சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
- வண்டி எண்: 5 மற்றும் 6 ஆகிய எண்கள் ஆடம்பர வண்டிகளுக்கும், விபத்துகளற்ற பாதுகாப்பான பயணத்திற்கும் உகந்தது.
- தவிர்க்க வேண்டிய எண்: 2, 7 மற்றும் 4 (உங்கள் சொந்த எண்ணாக இருந்தாலும் வண்டிக்குத் தவிர்ப்பது நல்லது).
7, 8, 9 இல் பிறந்தவர்கள் (தேதிகள்: 7, 16, 25 / 8, 17, 26 / 9, 18, 27)
- மொபைல் எண்: உங்களுக்கு 1, 3, 5, 9 ஆகிய எண்கள் சமூகத்தில் மதிப்பையும், அதிகாரத்தையும் தரும். 8 மற்றும் 9-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கூட்டுத்தொகை 1 அல்லது 5 வரும்படி மொபைல் எண் அமைத்தால், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, அசுர வேகத்தில் செல்வம் பெருகும் யோகம் உண்டாகும்.
- வண்டி எண்: 3, 5, 9 எண்கள் அதிர்ஷ்டமானவை.
- தவிர்க்க வேண்டிய எண்: 8-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் 8 மற்றும் 4 ஆகிய கூட்டு எண்களை வண்டிக்குக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இது வீண் செலவுகளையும் அலைச்சலையும் தரும்.
இதையும் படிங்க : Astrology : ஜூன் 29 முதல் எந்தெந்த ராசிகளுக்கு ராஜயோகம்? உஷாரா இருக்க வேண்டியது எந்த ராசி? முழு விவரம்!